போலியேர் ஊசி

போலியேர் சொட்டு மருந்து மாதிரி, போலியேர் ஊசி பற்றி சொல்லுங்களேன்.யாரவது போட்டு உள்ளீர்களா?

IPV என்று சொல்வார்கள். Injection polio இது 2வது, 4வது, மற்றும் 6-18 மாதங்களில் கொடுப்பார்கள். இது OPV’யை விடவும் நல்லது. OPV கொடுத்தாலும் IPV ஓடுவதில் தவறில்லை. என் பிள்ளைகளுக்கு டாக்டர் போட சொல்லி எழுதினாங்க. ஆனா நான் என் பிள்ளைகளுக்கு வழக்கமா போடும் தடுப்பூசியே Combination Vaccine எனப்படும் 5 தடுப்பூசி (diphtheria, tetanus, pertussis, hepatitis B, and polio) கலந்த acellular தடுப்பூசி போட்டுவந்தேன்... அதில் IPVயும் அடங்கும். அதனால் இந்த எக்ஸ்ட்ரா இன்ஜக்‌ஷன் தேவை இல்லாமல் ஆனது. நீங்க எந்த தடுப்பூசி வழக்கமா போடுறீங்க என்பதை பார்த்து IPV போடுவதை முடிவு செய்யவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் OPV தான் போட்டுள்ளேன்.அதான் கேட்டேன்,ரொம்ப நன்றி வனிதா அக்கா.

மேலும் சில பதிவுகள்