வெள்ளை பூரிகுருமா

தேதி: September 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (10 votes)

 

பெரிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)
அரைக்க :
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
தேங்காய் - மூன்று தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
தாளிக்க:
சோம்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 2
லவங்கம் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின் தேவையான அளவிற்கு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அவித்து மசித்து வைத்து இருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.
குருமா கொஞ்சம் கெட்டியாக வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெள்ளை குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

குமாரி... ரொம்ப சுலபமா செய்ய கூடிய குறிப்பு... அழகா செய்து காட்டியிருக்கீங்க.... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

Naan masala illamal seithathu illai.ungal murai padi seithutu varen

சுப்பர் குறிப்பு:) அக்கா வாழ்துகள்.......

வாழ்க வளமுடன்
பவித்ரா

வாழ்க வளமுடன்
பவி

ஹாய் குமாரி......எங்க மாமியார் வீட்டில் இப்படிதான் செய்வார்கள். என் கணவருக்கும் இப்படி வைத்தால் தான் பிடிக்கும். செய்வதும் ரொம்ப எளிமை. வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

முதல் நாள் இன்று நான் இங்கே வருவது முதல் குறிப்பு தங்களுடையதுதான் பார்த்தேன் வணக்கம் மேடம் நான் என் நண்பர்களுடன் வசிக்கிறேன்.சமையல் நாங்கள் தான் செய்வோம் உங்கள் குறிபை செய்து பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.வணக்கம்.எங்களுக்கு தேவையான குறிப்பை கொடுத்து உள்ளீர்கள்.

நன்றி

நல்லா இருக்கே ஐடியா செய்து பாக்கறேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குமாரி சூப்பர் படாபட் குறிப்பு. செம எளிதான குருமா நன்றி குமாரி எங்களுடன் பகிர்ந்துகிட்டதுக்கு.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் விஜி முதல் ஆளா வந்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வித்யா நீங்க சொல்றது போல் சுலபமா செய்திடலாம்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஜானு இம்முறையில் செய்து பார்த்துட்டு பிடித்ததான்னு சொல்லுங்க நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பவித்ரா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு குமாரி

எளிமையா இருக்கு. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ப்ரியா என் கணவருக்கும் இம்முறையில் செய்வது பிடிக்கும்.பத்து நிமிஷத்துல செய்துடலாம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

யுவன் செய்து பாருங்கள் மறக்காமல் எப்படி இருந்தது என்று சொல்லுங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரேணு :) அப்போ கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

படாபட் குறிப்புதான் உண்மையில் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி யாழினி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் மஞ்சுளா வருகைக்கும் பதிவிற்கும் நன்றி .எளிமையான குறிப்புதான் செய்வதும் அப்படிதான் ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு குமாரி,

பூரிக்கு எத்தனை விதமான சைட் டிஷ் இருந்தாலும் நல்லா இருக்கும், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக செய்து சாப்பிடறதுக்கு. நல்ல குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

அசத்தலான பூரிக்கு ஏற்ற காம்போ..
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எளிமையான, அருமையான குறிப்பு!
வாழ்த்துக்கள் குமாரி!

அன்புடன்
சுஸ்ரீ

குமாரி,

ரொம்ப அருமையா இருக்கு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சீதா மேடம்,எனக்கும் ஏதாவது பூரிக்கு விதவிதமா செய்ய பிடிக்கும் இதில் பட்டாணி சேர்த்து செய்யலாம் இன்னும் நல்லா இருக்கும்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரம்யா சப்பாத்தியை விட பூரிக்கு நல்லா இருக்கும்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சுஸ்ரீ.

செய்து பாருங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கவி செய்து பாருங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

madam recipe s so nice to look at .. madam ginger garlic paste 1 spn podalama.. and soombu 1/2 spn or 1 spn

இஞ்சி பூண்டு ஸ்மெல்காகத்தான் ஒரு தேக்கரண்டி போதும் சோம்பு அரை தேக்கரண்டிக்கும் கம்மியா போட்டு செய்ங்க.எனக்கு சோம்பு ஸ்மெல் பிடிக்காது நான் இன்னும் கம்மியா சேர்ப்பேன்.எல்லாம் நம்ம இஷ்டம் தான் பா.

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி எளிமையான குருமா குறிப்பு. நல்லா இருக்கு சீக்கிரம் செய்து பார்த்துவிடுகிறேன். வாழ்த்துக்கள்.

ஹாய் வினோ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .செய்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப சுவையான சைட் டிஷ். எனக்கு பூரின்னாலே விருப்பம்... கூட இந்த குருமா... சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் நீங்களும் இபப்டி செயவிங்கணுல நினச்சேன்.
செய்து பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிகவும் எளிமையா ஒரு குருமாவா, அடுத்த பூரிக்கு இது தான்.வாழ்த்துக்கள் குமாரி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வருகைக்கும் பதிவிற்க்கும் நன்றி சுகி.செய்து பார்த்துட்டு சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,
வித்தியாசமான குர்மா.இதுவரை இப்படி செய்ததில்லை.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் குமாரி.

ஹாய் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. பத்து நிமிசம்தான் செய்யணும்னு நினச்சாலே முடிச்சிடலாம்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் அக்கா,
நான் உங்கள் வெள்ளை குருமா செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததர்க்கு மிக்க நன்றி மா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நீங்கள் சொன்னது போலவே பூரிக்கு செய்து சாப்பிட்டோம்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றாக இருந்தது என்று என் கணவரும் குழந்தையும் விரும்பி சாப்பிட்டார்கள்.

லிலு முரளி.

ஹாய் லிலு மிக்க நன்றி பா,எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

It was a great dish which even I was able to do . Thanks Prema. I'm able to get the similar taste which you do.

அங்கே போய் செய்து சாபிடுரிங்க, சரியா வருதான்னு இங்கே வந்ததும் எனக்கு செய்து குடுங்க அபப்டியாவது என்ன உட்கார வெச்சி சமைச்சி போடுறிங்களா பாக்கலாம்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪