பிரியாணி பக்கோடா

தேதி: September 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பிரியாணி - ஒரு கப்
எள் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
வறுத்த ரவை - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கொத்துமல்லி தலை -தேவையான அளவு.


 

பிரியாணியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் ரவையைப் போட்டு மிருதுவாகும்வரை கிளறவும்.
இதனுடன் அரைத்த பிரியாணி கலவை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், சோள மாவு,வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்
காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன ஒரு கண்டுபிடிப்பு. யார் சுகி இந்த ரெசிப்பி எல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கறது. செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. எந்த பிரியாணில செய்யலாம்?

எனக்கு தெரியும் நீயா தான் இருப்பன்னு... :-)
இந்த ரெசிபி, அம்மா ஸ்பெஷல். ஒரு டைம் விளையாட்டா பண்ண போக, அது என்னமோ நல்லா வந்துடுச்சு. டெஸ்ட் சொல்லவே வேண்டாம். செம சூப்பர். எல்லா பிரியாணிளையும் பண்ணலாம், பிரியாணி ல இருக்க வெஸ்ட் எல்லாம் எடுத்துடனும். (பிரியாணி இழை, பட்டை ...)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அம்மாவின் கண்டுப்பிடிப்பா இது. சாதத்துல அடை, பக்கோடா செய்வோம். பிரியாணில பக்கோடாவா வித்தியாசமா இருக்குனு ஓபன் பண்ணி பார்த்தா உன்னோட குறிப்பா இருக்கு. இது மாதிரி வித்தியாசமான நிறைய குறிப்பு கொடு சுகி.

ஹாய் சுகந்தி........... வித்தியாசமான ரெசிபி...... நெற்று செய்த வெஜ் பிriyaaniயை இன்னைக்கு காலைலதான் காலி செய்தேன். ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்..... ஓஓகே. நெக்ஸ்ட் டைம் மிஸ் பண்ணாமல் செய்து பார்க்கிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.