டயட் மோர்

தேதி: June 25, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பழைய சோற்றின் நீர் - 2 டம்ளர்
மசாலா இல்லாத எலுமிச்சை ஊறுகாய் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
நாட்டு வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கட்டி (தேவைப்பட்டால்) - 4


 

நீர் ஊற்றிய பழைய சோற்றை பிசைந்து விட்டு அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் உப்பு மட்டும் போட்ட எலுமிச்சை ஊறுகாயை பிசைந்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, ஐஸ்கட்டி சேர்த்து கலக்கி பரிமாறலாம்.
இது கோடை வெயிலுக்கு மிக அருமையாக இருக்கும்.


வெண்ணெய் எடுத்த மோராக இருந்தாலும், பால் உணவு என்ற வகையில் மோர் அருந்த முடியாமல் டயட்டில் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான மோர். பழைய சோற்று நீர் சற்று புளித்திருந்தால் நல்லது.

மேலும் சில குறிப்புகள்