டேட்ஸ் ஜவ்வரிசி பாயாசம்

தேதி: September 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

டேட்ஸ் - 10 விதை நீக்கி துண்டுகளாக்கியது
ஜவ்வரிசி - 1/2 கப் 20 நிமிடம் ஊறவைத்தது
பசும் பால் - 3 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
ஏகக்காய் தூள் - 1 பின்ச்
சுக்கு தூள் - 1 பின்ச்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10


 

துண்டுகளாக்கிய பேரீச்சம்பழத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்..பேரீச்சை இளகி இருக்கும்
இதில் ஜவ்வரிசி ஊறவைத்ததையும் பாலும் சேர்த்து காய்ச்சவும்
சும்மார் 10 நிமிடத்தில் அனைத்தும் வெந்து பாலுடன் கட்டியாக வரும்
தேவைக்கு சர்க்கரையும் பார்த்து சேர்த்து உப்பு 1 பின்ச் சுவைக்கு சேர்த்து விடவும்
தீயை அணைத்து விட்டு ஏலக்காய் மற்றும் சுக்கு பொடியை சேர்க்கவும்
நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து கொட்டவும்
சுவையான டேட்ஸ் பாயாசம் ரெடி


மொத்தமாகவே 10 நிமிடம் போதும் சுவையாக தயாரிக்கலாம்..இன்னும் சிறிது சுவை கூட்ட கன்டென்ஸ்ட் மில்க் சேர்க்கலாம் சர்க்கரை தேவையில்லை...அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து செய்யலாம் கோதுமை பாயாசத்தின் சுவையில் இருக்கும்.பேரீச்சம்பழம் எப்பொழுதுமே கீர்,பாயாசங்களில் சேர்த்தால் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

தாளிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்க பாயாசம் தான் இன்று செய்து சுவைத்தேன். சூப்பராக இருந்தது. வித்தியாசமாகவும் சத்துள்ள டேஸ்ட்டான ரெசிபி. மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் அனந்தப்ரியா அரசு..ரொம்ப சந்தோஷம்.இது நானே கண்டுபிடிச்ச குறிப்பு;-)