வாழைத்தண்டு வேர்க்கடலை பொரியல்

தேதி: September 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வாழைத்தண்டு - ஒன்று
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - பாதி
பூண்டு - 7 அ 8 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி
தனியா தூள் - 1/2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். நறுக்கும் போதே,அதன் நாரை விரலால் சுற்றி எடுத்துவிடவும்.
பின் வில்லைகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.முட்கரண்டி கொண்டு கலக்கினால் நார் இருந்தால் வந்துவிடும்.
நறுக்கிய வாழைத்தண்டில் சிறிது மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து,தோல் நீக்கி,மிக்சியில் கொர கொரவென்று பொடித்துக் கொள்ளவும்.( நைசாக அரைக்க கூடாது.)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
அதில் பூண்டை தோலுடன் நசுக்கி வதக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள வாழைதண்டை சேர்த்து,தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
இப்போது வேர்க்கடலை பொடியை சேர்த்து, நன்கு கிளறி விடவும்.உப்பு சரிப்பார்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான வாழைத்தண்டு வேர்க்கடலை பொரியல் தயார்.சாம்பார் சாதத்துடன் நன்றாக இருக்கும்.


வாழைத்தண்டும்,வேர்க்கடலையும் நல்ல காம்பினேஷன்.இதில் சேர்க்கும் பூண்டின் வாசம் ரொம்ப நல்லா இருக்கும்.வீட்டில் அம்மா சமையல் முடிப்பதற்குள்,
இந்த பொரியலை அப்படியே சாப்பிட்டு விடுவோம்.அவ்வளவு சுவையான பொரியல் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

innikke seithu parkiren.

god is love

ஷீபா,
செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.பதிவுக்கு நன்றி.