ஸ்வீட் ஃப்ரூட் போண்டா

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம்
மாம்பழம் -2 துண்டுகள்
வாழைப்பழம் - 2
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
வறுத்த பாசிப்பருப்பு - 100 கிராம்
பொடித்த வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு


 

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும்
வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள்,வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும்.
இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும்.
ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்