கோவக்காய் சட்னி

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

கோவக்காய் - 100 கிராம்
வெங்காயம் - பாதி
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
கோவக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, கோவக்காய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து நன்கு அரைத்து விட்டு, கடைசியில் கோவக்காய் சேர்த்து அரைக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். வழக்கமாக கோவைக்காயில் செய்யும் கூட்டு, சாம்பார், பொரியல் தவிர இந்த சட்னியும் செய்யலாம். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்

பச்சை மிளகாயினால் உண்டாகும் சூட்டை தணிக்க, இதில் சிறிது வெந்தயம் சேர்க்கிறோம். சட்னியை அரைத்த பின்(தாளிக்கும் முன்) மீண்டும் நன்கு வதக்கி கொண்டால் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோவக்காயில் சட்னி!!! புதுசு. சூப்பர்... ரெடியா இருக்கு வீட்டில் செய்து பார்க்கிறேன். கலக்கலா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக அருமை சர்க்கரை வியாதிகாரர்களுக்கு அருமையான் குறிப்பு

Jaleelakamal

ஹர்ஷா
கோவைக்காயில் சட்னி வித்யாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன். வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

கோவக்காயில் சட்னி புதுசா இருக்கு.நல்லா ட்ரை செய்து இருக்கிங்க... கசக்குமா?
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

ஜலீலா அக்கா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.உங்க டிப்ஸ் அருமை.நன்றி.

மஞ்சு,
உங்க பதிவுக்கு நன்றி.சட்னி செய்து பாருங்க.

ரம்ஸ்,
கசக்காது.கோவக்காயில் செய்த சட்னினு சொன்னால்தான் தெரியும்.சுவையும் நல்லா இருக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.பதிவுக்கு நன்றி.

அன்பரசி,
வித்தியாசமான சட்னி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

புதுமையான கோவக்காய் சட்னி டிப்ஸூம் நல்லா இருக்கு. பச்சைமிளகாய் சேர்க்கற ரெசிப்பி எல்லாத்துக்கு வெந்தயம் சேர்க்கலாமா.

கவிதா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

வினோஜா,
பதிவுக்கு நன்றி.ரெசிப்பியை பொறுத்து வெந்தயம் சேர்க்கலாம்.கார குழம்பு,புளியோதரை இவற்றில் வெந்தயம் சேர்க்கும்போது வாசமும் தரும்.புளியினால் உண்டாகும் சூட்டை குறைக்கும்.சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலிக்கு சிறிது வெந்தயத்தை விழுங்கினால் உடனே வலி சரியாகும்.வெந்தயம் சாப்பிட்டால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பு அதிகமாகும்.

ஹாய் அன்பரசி கோவக்காய் சட்னி செய்ததே இல்லை, செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

Indru ungalathu kovakkai chatny seithen thaVaraga ninaiga vendam migavum kasPaga malli vithai vasanayodu erunthathu!!! Neengal kooriyathu pol than seithen but yethum thavaru seithena enru theriyavillai oru santhegam chatniyai kothikkavaika venduma?

லக்ஷ்மி பாரதி,
இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை.நீங்கள் தனியாவை அதிகளவு சேர்த்திருப்பீங்க அல்லது சரியாக வதக்காமல் விட்டுருப்பீங்கனு நினைக்கிறேன்.கசப்பாக இருக்க வாய்ப்பில்லை.விரும்பினால் மீண்டும் வதக்கி கொள்ளலாம்னு குறிப்பிலேயே சொல்லியிருக்கேனே.

உங்கள் கோவக்காய் சட்னி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. 2-2 மிளகாய் தான் சேர்தேன், செம காரம், செம taste. என்க்கும் என் husband கும் ரொம்ப பிடிச்சுது.

Subadra Baskar