தக்காளி ஊறுகாய்

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பெங்களூர் தக்காளி - அரைக் கிலோ
பட்டை வத்தல் - 30 எண்ணிக்கை
நல்லெண்ணெய் - 150 கிராம்
நாட்டுப்பூண்டு - 100 கிராம்
வறுத்து பொடித்த வெந்தய பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 4 ஆர்க்கு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து தக்காளியை போட்டு நன்றாக வேக வைக்கவும். தண்ணீர் வற்றி நன்கு சுருண்டு வரவும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பட்டை வத்தல் சேர்த்து நன்றாக மசிய அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கியதில் அரைத்த தக்காளி விழுது உப்பு, வெந்தயப்பொடி, பெருங்காயம், சேர்த்து நன்றாக வதக்கவும். அடி பிடிக்காமல் கிளறவும்.
நன்றாக சுருண்டு அல்வா பதத்துக்கு வ்ரும் வரை வைத்திருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரவும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி.

தக்காளி நல்ல பழமாக சிவப்பாக இருக்க வேண்டும் அப்போது தான் கலர் கிடைக்கும் தக்காளி வேகும் போது வாயில் வைத்து பார்த்தால் இனிப்பாக இருந்தால் சிறிது புளி சேர்த்து வேகவிடவும். ஆறியதும் டப்பாவில் வைத்து கொள்ளவும். ஃப்ரிட்ஜ்ஜில் 15 & 20 நாள் வரை வைக்கலாம். வெளியில் வைத்தால் நான்கு நாட்கள் வரை வைக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படத்தை பார்க்கும்போதே நாக்கு ஊருது,அப்படியே எடுத்து வாயில் போட சொல்லுது,நிச்சயம் ட்ரை பன்றேன்,ப்ரிட்ஜில் நிறைய தக்காளி பழமாக இருக்கு,செய்துட வேண்டியதுதான்,வாழ்த்துக்கள்!

Eat healthy

அஸ்ஸலாமு அலைக்கும் ஐயோ சூப்பரா இருக்கு பா வாய் நிஜமாவே நாக்கு ஊருது இன்ரு நைட் இங்கு குப்பூஸ் அதுக்கு சைட் டிஷ் இதுதான்

SSSSSSSS ppaammmm
உப்புமா, சேமியா, பிரியாணி எல்ல்லாத்துக்கும் பொருந்தும் போல

Jaleelakamal

பாத்திமா,
ஆஹா! தக்காளி ஊறுகாய் சூப்பர். இப்பவே சாப்பிடனும் போல் உள்ளது. வாழ்த்துகள். விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பாத்திமா அம்மா,

சூப்பர் ஊறுகாய்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர் குறிப்பு..
நாக்குல நீர் ஊறுது
எங்க அம்மா நியாபகம் ... அவங்க செய்தா சாதத்துக்கே போட்டு பிசைந்து சாப்பிடுவேன்.
கண்டிப்பா செய்து சாப்பிட்டு தான் மறுவேலை :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
தக்காளி ஊறுகாய் பார்க்கவே சூப்பரா இருக்கு.கண்டிப்பா செய்து வச்சுக்கணும்.நல்ல குறிப்பு கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.

பார்க்கவே சாப்பிட தூண்டுது சூப்பர் தக்காளி ஊறுகாய். ஈஸி மெத்தட்டும். நிச்சயம் செய்து பார்க்கனும். சப்பாத்தில அப்படியே தடவி ரோல் பண்ணி சாப்பிட்டா அடடா.

சுலபமான செய்முறையில் சுவையான தக்காளி ஊறுகாய் சூப்பரா இருக்கு.

ஆஹா என் மாமியார் ஸ்பெஷல் தக்காளி ஊறுகாய்... எல்லா வகை உணவுக்கும் இது செம காம்பினேஷன்.... :) நாங்க நூடுல்ஸ் கூட சேர்த்துலாம் சாப்பிடுவோம்...:)) கலர்புல்லா இருக்கு... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

ஊறுகாய் அழகா இருக்கு. செய்ய கஷ்டமாகவும்த் தெரியல. செய்து பார்க்கிறேன்.
நன்றி.

பாத்திமா நான் இன்னைக்கே செய்ய போறேன்,வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ennaiyil kaduku,venthayam,kariveppilai thaliththu thakkali,poondu nanku vathakki,milakaai podi,manjal,salt,konjam puzhi charu,kaayam podi,konjam thanni theliththu nanku churula vathakki irakka innum easy yaka irukkum.ore time velai mudinthu vidum. mixie thevai illai.naankal ippadithan seivom.

god is love

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வலைக்கும்சலாம்.......வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி தோழி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிவிருப்ப பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கு மிக்க நன்றிடா

வருகைக்கு மிக்க நன்றிடா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கு நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கு நன்றி

பாத்திமா அம்மா இன்னிக்கு உங்க தக்காளி ஊறுகாய் செய்தேன் நல்லா வந்தது புளி போதல்ல இறக்கிய பின் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டேன்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.