மைசூர் ரசம்

தேதி: September 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (13 votes)

புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
துவரம் பருப்பு - கைப்பிடி
வறுத்து அரைக்க :
கொத்தமல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 3
கடலைபருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - 2 கிள்ளு
கறிவேப்பிலை - 2 இதழ்
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
தாளித்து ஊற்ற:
கடுகு - சிறிது
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல் ( நசுக்கியது )
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இதழ்

புளியை ஊற வைக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.
பின் அதே பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை போடவும்.
புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் கழித்து பின் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். தேவையான உப்பை போட்டுக் கொள்ளவும்.
இடையில் இன்னொரு சிறிய கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி தாளித்து ஊற்ற வேண்டிய பொருட்களை தாளித்து ரசத்தில் கொட்டவும்.
மணமான, மிகவும் சுவையான மைசூர் ரசம் தயார். மல்லித் தழையை தூவவும். வேண்டுமெனில் ஒரு தேக்கரண்டி ரசப் பொடியையும் சேர்க்கலாம். இன்னும் மணம் தூக்கலாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... சூப்பரா இருக்கு ரசம். கலர் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான ரசம் வாசனை கம கம நு இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா
by Elaya.G

ரசம் பார்க்க ரொம்ப கலர்ஃபுல்லா நல்லா இருக்கு,நீங்க சொன்ன எல்லா பொருளும் இருக்கு,ஆனால் மல்லி விதை இல்லை,மல்லி தூள் கொஞ்சம் சேர்த்துக்கலாமா?

Eat healthy

மைசூர் ரசம் பார்க்க சூப்பரா இருக்கு பா ரசியா சொன்னது போல் கொத்தமல்லி விதை இல்லப்பா பொடி சேர்க்கலாமா?

ரசம் பார்த்த உடனே டேஸ்ட் தெரிந்து போச்சு.சூப்பர் ரம்யா.

எனது குரிப்பை வெளியிட்ட அட்மின் குழுவுக்கு நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்பவும் உங்க கமண்ட்ஸ் தான் முதலில் இருக்கும்... வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி.. செய்து பார்த்து சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி டா.. வறுக்கும் போது 1 ஸ்பூன் கொத்தமல்லி தூளை சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.. :) எல்லாம் ஒன்று தானே.. ஆனாலும்
நான் செய்து பார்த்தது இல்லை இதை போல.. நல்லா வந்தா சொல்லுங்க.. நானும் செய்துக்கறேன் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா சேர்த்தே செய்து பாருங்க.. எப்படி வருதுனு பார்ப்போம்..எப்படியும் அரைக்கத் தானே போறோம். சோ வறுக்கும் போது 1 ஸ்பூன் தூளை சேர்த்துக்கோங்க.. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா... ரசம் வாசனை இங்கே வரைக்கும் வருது ரம்யா! :)
அரைச்சிவிட்ட ரசம் செய்திருக்கேன், ஆனால் தேங்காய் சேர்த்து அரைத்து செய்வது புதுமையா இருக்கு! கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கறேன்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அவசியம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க..
நல்ல வித்தியாசாமான ரெஸிபியா இருக்கும் நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,
மைசூர் ரசம் உறவினர் வீட்டில் சாப்பிட்டது.செய்முறை தெரியாமல் இருந்தது.உங்க குறிப்பின்படி செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

ரம்யா,

மணமணக்கும் ரசம்.
அவசியம் செய்து விட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி..செய்து பார்த்திட்டு கண்டிப்பா சொல்லோனும் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி டா..
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மைசூர் ரசம் இனி சிங்கப்பூரிலும் மணக்கும்.

மகனுக்கு ரசம் என்றால் மிக இஷ்டம். தினமும் எப்படித்தான் சாப்பிடுவாரோ? எனக்கு அதே ரசம் வைத்து போரடித்து விட்டது... அவருக்கு இல்லை.:)

இனி அடுத்து போரடிக்கும் வரை இந்த ரசம்தான்.

ரம்யா ரசம் சூப்பர் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இன்னிக்கு தான் ரசம் செய்து பாத்தேன்/ சூப்பரா இருந்திச்சு.

ரம்மி... ரொம்ப வித்தியாசமா இருக்கு... ரசத்துல தேங்காய் எல்லாம் சேர்த்து... ம்ம்ம்ம்... எங்காளு ஒரு ரசம் விரும்பி.... அவருக்காகவே வித்தியாசமா தேடி புடிச்சு ரசம் செய்வேன்... கண்டிப்பா உன்னோட ரசம் இன்னிக்கே வீட்ல மணக்க போகுது.... :)) நன்றி டா... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

ரம்யா,

ரசம் சூப்பர்! நேற்று இரவே செய்தாச்சு! என் ஹஸ் ஒரு ரசப்பிரியர்! :) அதான் காலைல பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன், டின்னருக்கென்று! நல்ல காரசாரமா டேஸ்ட் அருமையா இருந்தது ரம்யா. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரசம் மட்டும் நான் எப்பிடி செய்தாலும் என் கணவர் குறை சொல்லிட்டே இருப்பார் உங்க மேதொட்ல செய்துபாகவேண்டியதுதன்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

ரசம் எப்படி செய்தாலும் டேஸ்டா இருக்காது .கடையில் வாங்கிய ரசப்பொடியை வைத்துதான் செய்வேன். ரம்யா உங்க செய்முறை ரசம் நல்லா இருக்கு.

Ramya., Rasam Singapore varaikum manakuthunga., en kutti paiyanuku Rasam romba pudikum., unga murai la switch parthutu thirumbavum varen.,

ரசம் சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்... விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சு :-)

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப நன்றிங்க. செய்து பார்த்து சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா.. அப்ப குட்டி பைனுக்கு செய்து கொடுத்து என்ன சொன்னாருனு சொல்லுங்க. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி
செய்து பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இது தானே சரியான பெயர். தவறா இருந்தா சாரி..
செய்து பார்த்துவிட்டு உங்களவர் என்ன சொன்னாருனு சொல்லுங்க. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா.. செய்து பார்த்து பதிவும் போட்டதுக்கு ரொம்ப நன்றி டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ப்படியா. அப்ப முதலில் தலைவருக்கு செய்து கொடுத்து என்ன சொன்னாருனு சொல்லுங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ொம்ப நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர். செய்து பார்த்து சொன்னதுக்கு நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா..
சரி.. கண்டிப்பா மண மணக்க செய்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா நேற்று இந்த ரசம் செய்தேன்...நன்றாக இருந்தது...நன்றி & வாழ்த்துக்கள் ரம்யா...

செய்து பார்த்து பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்மி உனக்கு பதிவு போட்ட அன்னிக்கே செய்துட்டேன் டா... அருமையா வந்துச்சு.... ரசம் சூப்பர் ன்னு சொல்லிட்டார் எங்காளு... அதுதான நமக்கு வேணும்... :) கிரெடிட் கோஸ் டு ரம்யா ன்னு சொல்லிட்டேன்.... :)) நன்றி டா....

வித்யா பிரவீன்குமார்... :)

அப்படியா?
ரொம்ப நன்றி டா.. செய்து பார்த்து பதிவு போட்டதிற்கு..
பிடித்ததில் மகிழ்ச்சி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi!

I have tried your MYSORE RASAM Recipe many times.I have got many credits for Mysore Rasam from my Husband and from Family members and My Friends.

Last year I got married and started doing cooking with the help of Arusuvai and VhareVah. This recipe made everyone to believe that I have learnt cooking :-)

Thanks you so much for this wonderful recipe. I have mainly registered in arusuvai.com to add this comment and thank you for your recipe.

Thanks again.