கேப்ஸிகம் ட்ரை கறி

தேதி: September 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

கேப்ஸிகம் - 4
வெங்காயம் - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
கேப்ஸிகம் மற்றும் வெங்காயத்தை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை சேர்த்து வெடிக்க விடவும். அதனுடன் கேப்ஸிகம் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கேப்ஸிகம் மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் உப்பு மற்றும் பொடிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
சுவையான கேப்ஸிகம் ட்ரை கறி ரெடி. சப்பாத்தி மற்றும் கலவை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கேப்ஸிகம் கறி இறக்குவதற்கு முன்பு சிறிது கடலைமாவு தூவி கிளறி இறக்கினால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். கேப்ஸிகம் இரும்பு சத்து மிக்கது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வழக்கம் போல் நல்ல குறிப்பு, வித்தியாசமான குறிப்பும் கூட. வாழ்த்துக்கள். ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

பொன்னி அக்கா ரொம்ப நல்லா இருக்கு உங்க குறிப்பு வாழ்த்துக்கள்
by Elaya.G

அழகா இருக்கு. கலர் கலர் குடைமிளக்கய் வாங்கி செய்து அசத்திடறேன். நன்றி.

hello madam,
ur recipe xplantaion s good..

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றிகள் பல.
வனி,
நசீம்,
இளையா,
தேன்மொழி,
லின்சி
ரொம்ப நன்றிப்பா. கண்டிப்பா செய்துபாருங்க.

பொன்னி

ஒரு குடைமிளகாய் வீட்டில் இருக்கே.. செய்து பார்த்து எப்படி இருந்ததுனு சொல்றேன். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பொன்னி,
கேப்சிகம் ட்ரை கறி ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க.அடுத்த முறை காப்சிகம் வாஙினால் உங்க ரெசிப்பிதான்.வாழ்த்துக்கள் பொன்னி.