வெண்டைக்காய் மசாலா கறி

தேதி: June 25, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய்- அரை கிலோ
தேங்காய்த்துருவல்- 1 கப்
சோம்பு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை- அரை கப்
தக்காளி [பொடியாக அரிந்தது]- 3 கப்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்
தேவையான உப்பு
வெங்காயம்-1 [பொடியாக அரிந்தது]


 

வெண்டைக்காய்களை சிறு துண்டுகளாய் அரிந்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சீரகம் போட்டு அது வெடிக்க ஆரம்பித்ததும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.பின் தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி நன்கு குழையும்வரை வதக்கவும். வெண்டைக்காய்த்துண்டுகளைச் சேர்த்து போதுமான நீரைச் சேர்க்கவும். தேங்காய், சோம்பு இரண்டையும் மையாக அரைத்து மிளகாய்த்தூள்,கொத்தமல்லியுடன் சேர்க்கவும். வெண்டைக்காய் நன்கு வெந்து கறி கெட்டியானதும் இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோ அக்கா,
இன்று உங்கள் வெண்டைக்காய் மசாலா கறி செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb