பருப்பு பொடி

தேதி: September 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

சிகப்பு மிளகாய் - 12
தனியா - கால் கப்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உளுந்து -கால் கப்
கடலை பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எள் - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொண்டு அதில் முதலில் உளுந்தை தனியே பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றையும் வறுக்கவும்.
காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். இப்படியே ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே பெருங்காயம், உப்பு தவிர்த்து சிறு தீயில் வைத்து புகை வராமல் வறுக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலையை சட்டியில் போட்டு நன்கு சருகு போலே வரும் வரையில் வதக்கவும்.
எல்லாவற்றையும் பரத்தி நன்கு ஆற விடவும்.
நன்கு பொடியாக திரித்து, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சுவையான பருப்பு பொடி தயார்.

இந்த பொடி அரை கப் அளவிற்கு எடுத்து வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து தாளித்து புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் அவசர சாம்பார் தயாராகும். இந்த பொடியுடன் காய்களை வேக வைத்து சேர்த்து தாளித்தால் கூட்டு தயார். வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா குறிப்பு வாழ்த்துக்கள். நம்ம அறுசுவை ல இந்த குறிப்பு ஏற்கனவே இருக்குன்னு நினைக்குறேன் by Elaya.G

நல்ல குறிப்பு... சாம்பார், கூட்டுன்னு எல்லாம் தயார் செய்யும் வகையில் நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசர சமையலுக்கு இந்த பருப்பு பொடி ரொம்பவே உபயோகமா இருக்கும் நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

தேவையானவையில் உளுந்தைக் காணோம்.
நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

நல்ல குறிப்பு. இத்துடன் கொஞ்சம் கொள்ளு வறுத்து சேர்த்து பொடித்தால் உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு உபயோகமா இருக்கும்.

நல்ல குறிப்பு.
செய்து வைத்தால் அவசரத்துக்கு உதவும்
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிதா,
பருப்பு பொடி நல்லா இருக்கு.கடைசியில் கொடுத்திருக்கும் டிப்ஸ் அருமை.வாழ்த்துக்கள்.

கவி பருப்பு பொடி சூப்பர் சாதத்தில நெய் போட்டு இந்த பொடி சேர்த்து சாப்பிட ஆஹா அருமையா இருக்கும் போங்க.... வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

திருத்தத்தோடு வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

இளையா,
அறுசுவையில் இல்லாத குறிப்பா?
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

வனிதா மேடம்,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

வினோ,
கண்டிப்பாக!!!
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

therese ,
இப்போ சேர்த்தாச்சு!!!
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

கோமு மேடம்,
நலமா?
கொள்ளு இங்கே கிடைக்கும் அடுத்த முறை சேர்த்து பார்க்கிறேன்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ரம்யா,
இந்த பொடியை வைத்து நிறைய வித்தைகள் செய்யலாம்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

அன்பரசி,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஸ்வர்ணா,
சுட்ட அப்பளத்தையும் கூட சேர்த்துக்கோங்க!! :)
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி பருப்பு பொடி சூப்பர் ,நீங்க வித விதமா பொடி வகை செய்து அசத்துறிங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,

ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவி,
இன்னிக்கு தான் உங்க பருப்பு பொடி பார்த்தேன். உடனே செய்து சாபிட்டும் பார்த்துட்டேன். ரொம்ப supera இருந்தது.

அன்புடன்,
ரேகா சுரேஷ்