மினி நானஹத்தா

தேதி: September 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

நெய் - ஒரு கப்
சீனி - 2 கப்
மைதா - 3 கப்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்


 

தேவையானவற்றை தயாராய் வைக்கவும். சீனியை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யையும் சீனியையும் போட்டு நன்றாக நுரைக்க உள்ளங்கையால் தேய்க்கவும். எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும்.
அதில் ஒவ்வொரு கப் மைதாவாக போட்டு பிசையவும்.
கலவை கொஞ்சம் உதிரியாக இருக்கும். கடைசியாக 2 தேக்கரண்டி நெய்யை ஊற்றவும். மாவு பால்கோவா பதத்தில் இருக்கும்.
இப்போது இந்த மாவை சுத்தமான தரையில் வைத்து சமமாக பரத்தி விடவும்.
சிறிய அச்சுகள் இருந்தால் அதை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மாவின் மேல் அழுத்தி வைத்து அச்சில் உள்ள மாவை தனியே எடுக்கவும்.
அவனை(oven) சூடு செய்யும் முன் ட்ரேயில் ஒரு ப்ரஷ் கொண்டு கொஞ்சம் நெய் தடவவும்.
அந்த ட்ரேயில் அச்சில் வைத்து எடுத்த நானஹத்தாவை கொஞ்சம் இடைவெளி விட்டு பரத்தவும். 150° சூட்டில் அவனில் வைக்கவும்.
நானஹத்தாவை அவ்வப்போது திறந்து பார்க்கவும். பணியாரம் வெள்ளையாக இருக்க வேண்டும். அதே சமயம் மேலே லேசாக வெடிப்புகள் இருக்கும். இதுதான் சரியான பதம். இப்போது தோசை திருப்பிக் கொண்டு நானஹத்தாவை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.
மீதியுள்ள மாவையும் இவ்வாறே விரும்பிய வடிவில் செய்யவும்.
சுவையான மினி நானஹத்தா ரெடி. ஆறிய பின் டப்பாவில் போட்டு வைக்கவும்.

நானஹத்தா மாவு உதிரியாக இருக்கும் பதத்தில் வைத்துதான் எங்க ஊரில் செய்வாங்க. பெரிய அச்சுகளின் மேல் ஒரு துணியை வைத்து அதன் மேல் மாவை வைத்து பிறகு அதை ஒரு தட்டில் கவிழ்த்தால் அச்சுகள் வரும், இவ்வாறு செய்வதால் அச்சுகளில் வைத்து எடுக்கவே ரொம்ப நேரம் ஆகும், அதனால் தான் கடைசியாக 2தேக்கரண்டி நெய் சேர்க்க சொன்னேன், இப்போது மாவு கொஞ்சம் கொழகொழப்பாக தரையில் தட்டுவதற்கு ஏதுவாக இருக்கும், அச்சில் வைத்து எடுப்பதும் சுலபம், சிறிய அச்சு இல்லையென்றால் பெரிய அச்சுகளிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க குறிப்பு அருமை பார்சல் போட்டு விட்டா இன்னும் அருமையா இருக்கும் வாழ்த்துக்கள் by Elaya.G

ரசியா நல்ல அருமையான குறிப்பு
இதில் ரவையே அரைத்து போட்டு நெய் பிஸ்கட் என்று இங்கே சொல்வோம் இதையும் செய்துடுவோம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இந்த குறிப்பை ரொம்ப நாலா தேடுறேன் எங்க அம்மா கிட்ட கூட கேட்டேன் தெரிலேண்டாங்க ரொம்ப நன்றி பா சூப்பர் இன்சா அல்லா செஞ்சுடுவேன்

ரொம்ப அழகா இருக்கு குட்டி குட்டியா... யம்மி. பெயரும் கியூட்டா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசியா.சூப்பர்பா. பார்க்கவே அழகா இருக்கு. நாக்கில் எச்சில் ஊறுது.வாழ்த்துக்கள்.

ரஸியா

அப்படியே ஒரு பிளேட் பார்சல் பிளீஸ்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மினி நானஹத்தா சூப்பரா இருக்கு. இதுல டூட்டி, ஃப்ரூட்டி கூட சேர்ப்பாங்கள.நெய், டால்டா இரண்டும் கலந்து செய்யலாமா ரஸியா.

பார்க்கவே அழகா இருக்கு.

கடைசிக்கு முந்தைய படங்களை ஸ்கிரீனில் வைத்து scroll பண்ணினால் அப்படியே virtual realityக்குள் போகுது...

3டி படம் மாதிரி... கை நீட்டி எடுக்கணும்போல இருக்கு...

வாழ்த்துக்கள்.

ஆஹா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ஒத்தாப்புல. யம்மி யம்மி நானகத்தா.

எதுக்கு பார்சல் ஜெனிலயா?வீட்டுக்கு நேரில் வாங்க,சுடச் சுட நானே செய்து தரேன்!சீக்கிரம் வாங்க!

Eat healthy

நன்றி பல்கிஸ்!ஓ அப்படியா?!ரவை போட்டு நான் செய்து பார்க்கிறேன்,நீங்க மைதா சேர்த்து செய்து பாருங்க!டீல் ஓகேவா?

Eat healthy

ரொம்ப சந்தோஷம் மெர்ஜானா!நீங்க தேடிய ஒன்றை நான் செய்து காண்பித்திருக்கிறேன்,இன்ஷா அல்லாஹ் செய்து பாருங்க!

Eat healthy

உங்க கமென்டும் கியூட்டா இருக்கு வனி!நன்றி!

Eat healthy

வாழ்த்துக்கு நன்றி நஜீம்!

Eat healthy

ஒரு ப்ளேட் போதுமா மஞ்சுளா?நன்றிங்க!

Eat healthy

ம்ம்ம்...டுட்டி ஃபுரூட்டி சேர்த்து செய்ததில்லைபா!நெய்யும் டால்டாவும் சேர்த்து செய்து பாருங்க,இதன் ஸ்பெஷலே நெய் வாசம்தான்,சாதா நெய்யுடன் பசுநெய் கொஞ்சம் சேர்த்து செய்யலாம்,வாசம் நல்லா இருக்கும்!

Eat healthy

அப்படி ஒரு வசதி இருந்தால் அருசுவையில் வரும் அனைத்து குறிப்புகளையும் நம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே சுவைக்கலாமே தேன்மொழி!உங்க பாராட்டுக்கு நன்றிபா!

Eat healthy

ரொம்ப நன்றி யாழினி!செய்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க!

Eat healthy

சூப்பர் பா நல்லா இருக்கு அழகா குட்டி குட்டியா இருக்கு குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு. நீங்க தப்பா பேர் எழுதிட்டீங்க. அத செஞ்சு அசத்துனது. நம்ம ரசியா.

சாரி ரஸியா தவறா நசீம்னு பேர் சொல்லிட்டேன் நசீமை அரட்டை பக்கம் போடுவதற்கு பதில் இங்கு போட்டுவிட்டேன் மன்னிக்கவும் பா நல்ல அழகான குறிப்பு விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் கண்டிப்பா செஞ்சு பாப்பேன் தாங்ஸ் நசீம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பரவாயில்லை ரேனுகா!என்னை பாராட்டினா என்ன!நஜீமை பாராட்டினா என்ன!!!செஞ்சு சாப்பிட்டு பார்த்துவிட்டு பதில் போடுங்க!!!

தனக்கு வந்த பாராட்டு தனக்குறியதல்ல என்று தெரிந்ததும் அதனை உரியவருக்கு செலுத்த ஒரு பெரிய மனம் வேண்டும்,அது உங்க கிட்ட இருக்கு நஜீம்,நன்றிபா!

Eat healthy

ரஸியா,
மினி நானஹத்தா, அழகா அடுக்கி, செம க்யூட்டா இருக்கு! எனக்கு இந்த பேக்கரி ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்! இதைப் பார்த்ததும் இப்பவே சாப்பிடனும்னு டெம்ட்டிங்கா இருக்கு!! :)

அன்புடன்
சுஸ்ரீ

இப்பத்தான் மருதாணிக்கு நீங்க போட்ட பதிவுக்கு பதில் போட்டுட்டு பார்த்தா,இங்கே நானஹத்தாக்கு ஒரு பதிவு உங்களிடமிருந்து..............அங்கே சொன்னதுதான் இங்கேயும் சொல்றேன்..சீக்கிரமா வாங்க,வாயில் நானஹத்தாவும்,கைய்யில் மருதாணியும் போடுகிறேன்!

Eat healthy

என்ன ரசியா நன்றினு பெரிய வார்த்தை.லாம் சொல்றீங்க.அவங்க அவங்க திறமைக்கு ஏற்ற பாராட்டு அவங்க அவங்களுக்கு கிடைக்கனும்பா.என்னை பாராட்டினா என்ன!நஜீமை பாராட்டினா என்ன!அந்த சொல்லிலிருந்தே உங்களுக்கு பெரிய மனசுன்னு தெரியுதுப்பா.வாழ்த்துக்கள் பா.

இந்த பெயரை இப்ப தான் கேள்விபடறேன்.
பாக்கவே நம்ம ஊறு பேக்கரி கடையில் ஃபிரஷா போட்ட மாதிரி இருக்கு
ஒரு நாள் செய்து பார்த்து சொல்கிறேன் ..
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரஸியா,
வாவ்,விதவிதமான ஷேப்களில் பார்க்கவே அழகா இருக்கு.குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

நானஹத்தா நாகப்பட்டினம் சைடு ஃபேமஸ்பா!ரொம்ப நல்லா இருக்கும்,செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க ரமி!நன்றி;

Eat healthy

குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும் ஹர்ஷா!செய்து பாருங்க,ஈஸிதான்.

Eat healthy

ரசியா நானஹத்தா பார்க்கவே சுவைக்க தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தாராளமா எடுத்து சுவைங்க ஸ்வர்னா!சாப்பிடத்தானே செஞ்சி அனுப்பியிருக்கேன்!!!ஹாஹா...

Eat healthy