ஈசி குக்கர் கேக்

தேதி: September 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (11 votes)

 

மைதா மாவு-2கப்
சீனி-ஒன்னரை கப்
வெண்ணெய்-1கப்
முட்டை-4
ரிஃபண்ட் ஆயில்-அரைகப்
பால்-அரை கப்
வெண்ணிலா எசன்ஸ்-அரை ஸ்பூன்
பேகிங் சோடா-முக்கால் ஸ்பூன்


 

சீனியை மிக்சியில் பொடித்து கொள்ளவும்.மைதா மற்றும் பேகிங் பவுடரை சலித்து கொள்ளவும்.

வெண்ணெய்,ரிஃபண்ட் ஆயில்,பொடித்த சீனியை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.அதனுடன் பேகிங் பவுடர் கலந்த மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலந்ததும் அதில் பால் மற்றும் எசன்சை விட்டு மீண்டும் நன்கு கலக்கவும்.இது தோசை மாவு பததில் இருக்கவேண்டும்.

அடி கனமான குக்கர் பாத்திரதில் நெய் தடவி அதில் கேக் மாவை ஊற்றி,குக்கரில் இந்த பாத்திரத்தை வைக்கவும்.(குக்கரில் தண்ணீர் ஊற்றவேண்டாம்.)

குக்கர் மூடிக்கு கேஸ் கட் போடாமல் குக்கரை மூடி 45 நிமிடம் சிம்மில் வைக்கவும்.சுவையான குக்கர் கேக் ரெடி


இந்த கேக்கிற்க்கு வெண்ணெய் இல்லையென்றாலும் பரவாயில்லை.ரிஃபண்ட் ஆயில் முக்கால் டம்ளர் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Your tips are good. Definetly i will try this. All the best

நன்றி கெளதமி.கட்டாயம் செய்து பாருங்க எப்படி செய்தாலும் நல்லா வரும்.

இந்த கேக்கை இட்லி குக்கரில் செய்யலாமா
கேக் ரெசிபி சூப்பர் கட்டாயம் செய்து பார்க்கிரேன்

பானுகமால்

ஹாய் பானு ப்ரெஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றாமல்,மூடிக்கு கேஸ் கட் போடாமல் செய்யவும்.இட்லி குக்கரில் நான் இது வரை செய்ததில்லைபா.செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க நல்லா வந்ததான்னு.

ஹாய்சுந்தரி குக்கர் கேக் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்பா.தண்ணிர் உற்றா விட்டால் அடி பிடிக்கதா மூடியில் வெயிட் போட வேண்டாமா.

குக்கரில் நெய் தடவி மாவை ஊற்றனுமா,அல்லதுமாவை ஒரு சிறியபாத்திரத்தில் ஊற்றி குக்கரில் வைக்கனுமான்னு சொல்லுங்கலேன் ப்ளீஸ்.ஈஸீயா குறிப்பு தந்ததுக்கு நன்றி சுந்தரி

முதலில் குறிப்பை படித்து பார்த்து சந்தேகம் கேட்டதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.குக்கருடன் அலுமினிய பாத்திரம் கொடுத்திருப்பார்கள்,அதில் நெய் தடவி மாவை ஊற்றி அந்த பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து 45 நிமிடம் சிம்மில் வைக்கவும்.செய்து பார்த்துவிட்டு நல்லா வந்த்ததான்னு தெரியபடுத்தவும் மகிழ்ச்சியடைவேன்

உங்களுடைய குக்கர் கேக் செய்தேன் ரொம்ப ரொம்ப நல்லா சாஃப்ட்டா வந்துச்சி.ரொம்ப நன்றி. படமெடுத்து குறிப்பு அட்மின்க்கு அனுப்பி இருக்கிறேன் விரைவில் வரும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நன்றி ஃபெரோசா,குக்கரில் தண்ணீர் ஊற்றவேண்டாம்,வெயிட் போடவேண்டாம் கேஸ் கட் போடவேண்டாம்.45 நிமிடம் சிம்மில் வைத்தால் போது.நடுவில் வெந்துவிட்டதா என திறந்து பார்த்தாலும் ஒன்றும் ஆகாது.செய்துபார்த்துவிட்டு நல்லாயிருந்தான்னு சொல்லுங்க.

ekk illamal epadi seivathu endru sollungal

Dhatchinamoorthy.G