சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்)

தேதி: June 25, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - 1.5 கப் (வேகவைத்து, தோலுரித்தது)
ஓமம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
தனியா பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டேபிள்ஸ்பூன், 1/4 கப் (பொரிப்பதற்கு)
உப்பு - 1/2 டீஸ்பூன்


 

முதலில் 1/4 கப் எண்ணெயில் சேப்பங்கிழங்கை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் 1/4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் ஓமத்தை அதில் போடவும்.
அது வெடித்தவுடன், சேப்பங்கிழங்கையும் சேர்த்து அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி, எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்