பூரி கிழங்கு

தேதி: September 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

பூரி செய்ய:
கோதுமை - ஒரு கப்
மைதா - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா செய்ய:
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மைதா மாவு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதில் வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இது அரை மணி நேரம் ஊற வேண்டும். ஈர டிஷ்யூ பேப்பர் அல்லது ஈர துணி போட்டு மூடி வைத்தால், மாவு ட்ரை ஆகாமல் இருக்கும்.
பின்னர் ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அதை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்த பூரி மாவை எண்ணெயில் மெதுவாக விடவும். பூரி மேலெழும்பும் போது மெதுவாக கரண்டியால் அழுத்தினால் பூரி நன்கு உப்பி வரும்.
பின்னர் பூரியை மெதுவாக திருப்பி அடுத்த பக்கம் சிவந்ததும் எடுக்கவும். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகபடியான எண்ணெயை நீக்கி விடலாம். பூரி தயார்.
உருளைக்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, 6 - 8 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து வேக விடவும். ஸ்டேண்டிங் டைம் 2 நிமிடங்கள் விடவும். நடு நடுவே ஸ்பூனால் கலந்து விட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை கரண்டியால் மசித்து சேர்க்கவும்.
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மைதா மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, உருளைக்கிழங்கு மசாலாவில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கிளறினால் மைதாமாவு வெந்து, மசாலா கெட்டியாகும்.
பின்னர் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான, சுலபமாக செய்யக்கூடிய பூரி கிழங்கு தயார்.

பூரி மாவு தேய்க்கும் போது, மைதா மாவு சிறிது தொட்டு தேய்த்தால் வட்டமாக தேய்க்க வரும். இல்லையெனில் பூரி தேய்த்த பின் ஒரு மூடி வைத்து வட்டமாக கட் பண்ணினாலும் பூரிகள் ஒரே அளவில் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மைதாமாவு கரைத்து கலக்க சொல்லி இருக்கீங்க செய்து பாக்கிரேன்

இன்னிக்கு ப்ரேக் ஃபாஸ்ட் உங்க பூரி கிழங்குதான். சூப்பரா வந்திச்சு. நன்றி

சூப்பரா இருக்கு....பொதுவா கடலைமாவு கெட்டியா வர சேர்ப்பாங்க..நீங்க மைதாமாவு சேர்த்திருப்பது நல்ல ஐடியாவா இருக்கு...

பார்க்கவே சாப்பிடணும்போல இருக்கு
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

poori supera iruku...........pakave sapdanum polarku................yummy.........keep giving delicious receipies.......

நானும் பூரி இதமாதிரி தான் செய்வேன் உங்க கிழங்கு சூப்பர் நைட்டே ட்ரை பன்றேன்

-ரஸினா

தனியா போடாமா காம்போவா போட்டது சாப்பிட அழைக்குது..
உங்க முறைப்படி மசால் செய்து பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் இது வரை பூரி செய்தது இல்லை. உங்களது குறிப்பு பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. செய்ய ஆசையாக உள்ளது.ஒரு சிறிய சந்தேகம் கோதுமைமாவும் ஆட்டாமாவும் ஒன்றா.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ராபியத்துல் பசரியா,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

கோமு,
எப்படி இருக்கீங்க?அதுக்குள்ள செய்துட்டீங்களா?ரொம்ப சந்தோஷம்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

இளவரசி,
வழக்கமா கடலைமாவு தான் சேர்ப்போம்.கடலை மாவு இல்லாத போது மைதாமாவு கைகொடுக்கும்.இதுவும் மசாலாவை கெட்டியாக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ரம்யா,
உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.பூரி மசால் செய்து பாருங்க.கண்டிப்பா எனக்கு தெரிந்த ரெசிப்பிகள் அனுப்புறேன்.நன்றி.

ரஸினா,
நீங்களும் பூரி இம்முறையில்தான் செய்வீங்களா?சேம் பின்ச்.மசால் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ரம்ஸ்,
ரொம்ப நாளா இரண்டு ரெசிப்பிகள் சேர்த்து கொடுக்கணும்னு ஆசை.அதான். :-) பூரி மசால் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஆட்டா மாவில் கோதுமை மாவுடன் சிறிது மைதா மாவும் கலந்து இருப்பார்கள். நான் பயன்படுத்தியது கோதுமை மாவு(whole wheat flour).

ஆட்டா மாவு சப்பாத்தி செய்ய ஏற்றது.பூரிக்கு ஆட்டா மாவு பயன்படுத்தினால்,தனியாக மைதா மாவு சேர்க்க வேண்டாம்.இம்முறையில் பூரி செய்து பாருங்கள்.எண்ணெய் சரியான அளவில் காய்ந்து இருக்க வேண்டும்.சூடு குறைவாக இருந்தால் எண்ணெய் குடிக்கும்.அதிக சூடானால் பூரி அதிகம் சிவந்துவிடும்.

பூரி செய்துட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

harshaa இன்னைக்கு காலை உணவு உங்க பூரியும் கிழங்கும்தான்
செய்து சாப்புட்டுட்டு தான் தெம்பா பதி குடுக்க வந்தேன் வீட்டில் எல்லாருக்குமே பிடித்து இருந்தது நல்ல சுவை நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பூரி கிழங்கு நானும் இதே முறையில்தான் செய்வேன் வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பல்கிஸ்,
பூரி கிழங்கு செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றிங்க.வீட்டில் எல்லாருக்கும் ரெசிப்பி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

ஸ்வர்ணா,
அப்படியா?உங்க வாழ்த்துக்கு நன்றி.

harshaa,
நீங்க ப்ரீய இருந்தா கொஞ்சம் இப்ப அரட்டை பக்கம் வாங்க பா...

அன்புடன் அபி

அன்பரசி ,

எனக்கு பிடித்த உணவு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் அன்பு நானும் உங்க முறையில் தான் செய்வேன் மைதாமாவும் கரச்சி ஊற்றுவேன் ,கோதுமை மாவும் ஊற்றுவேன் ,வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நேற்று பூரி கிழங்கு செய்து பார்த்தேன்.... எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி

- அன்பே சிவம் -

thanx for reply...........k sister.......innum niraya receipies anupa valthukal................

கவிதா,
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.

குமாரி,
நானும் கோதுமை மாவு கரைத்து செய்து பார்த்தேன்.சுவை அவ்வளவாக எனக்கு பிடிக்கல.மைதா மாவு கரைத்து ஊற்றினால் நல்லா வந்தது.அதனால்தான் இந்த குறிப்பு அனுப்பினேன்.உங்க வாழ்த்துக்கு நன்றி.

கோடி,
பூரிகிழங்கு செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றிங்க.

ரம்யா ஷண்முகம்,
உங்க வாழ்த்துக்கு நன்றி.

பூரி கிழங்கு எனக்கு நல்லாவே வராது நான் செய்தது எனக்கே பிடிக்காது.ஆனால் உங்க குறிப்பை செய்தேன்.ரொம்ப நன்றாக இருந்தது.குறிப்புக்கு நன்றி.

இனியா,
பூரி கிழங்கு செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.

very nice and easy recipe

maitha endra enna