புதினா மல்லி சட்னி

தேதி: September 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (11 votes)

 

புதினா - கைப்பிடி
கறிவேப்பிலை - 15 இதழ்
மல்லித் தழை - அரை கட்டு
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
தேங்காய் - ஒரு பெரிய துண்டு
கடலை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிது


 

தேவையான பொருட்களை முதலில் எடுத்துக் கொள்ளவும்
ஒரு சிறிய வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் பருப்பு வகைகளை போட்டு சிவக்க வறுக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பின்னர் புதினா மற்றும் மல்லித் தழையை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஆறியப் பின் இந்த கலவையை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைக்கவும். நைஸாக அரைக்க வேண்டாம்.
சுவையான, நல்ல வாசனையான சட்னி தயார். புதினா மற்றும் மல்லித் தழையை வதக்க கூடாது. சட்டியில் போட்டதும் கிளறி அடுப்பை அணைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வேர்க்கடலை சேர்த்த புதினா மல்லி சட்னி நல்லா இருக்கு. புதினா, மல்லி இழைகள் நல்லா வதக்கி செய்து இருக்கேன். உங்க முறைப்படி ஒருநாள் செய்து பார்க்கனும். வாழ்த்துக்கள்.

சூப்பர்.புதினா மல்லி சட்னி.வாழ்த்துக்கள் அக்கா.

புதினா ல நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் இந்த முறைளையும் சட்னி ட்ரை பண்ணி பாக்றேன் by Elaya.G

வேர்க்கடலையோடு இந்த காம்பினேஷன் புதுமையா இருக்கு..
பார்க்கவே நல்லா இருக்கு..அடுத்தமுறை இதுபோல் ட்ரை பணரென்
பச்சை கிளியின் பசுமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சூப்பரான சட்னி அடுத்த முறை செய்துடவேண்டியதுதான் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நீங்க சொன்ன இதே முறையில்தான் நான் சட்னி செய்வேன், ஆனா வேர்க்கடலை சேர்த்ததில்லை .. கடலைப்பருப்புதான். வேர்க்கடலை சேர்த்து அடுத்த முறை செய்து பாக்கிறேன். நன்றி;-)

Don't Worry Be Happy.

ரம்ஸ்,
இதுமாதிரி சட்னி நான் செய்ததில்லை.வித்தியாசமான குறிப்பு.சட்னி கலர் ரொம்ப அழகா இருக்கு.அதில் இருக்கும் பூவும் க்யூட்.வாழ்த்துக்கள்.

ரம்யா,
புதினா கொத்தமல்லி சட்னி, வேர்க்கடலை சேர்த்து புதுசான காம்போவா இருக்கு! அடுத்தமுறை இதுப்போல செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்க‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்யா,
வேர்க்கடலை சேர்த்து செய்து இருப்பது புதுமையா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வித விதமா சட்னி கொடுத்து அசத்துறிங்க ரம்யா வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்யா சட்னி வேர்கடல சேர்த்து செய்தது இல்லை., உங்க முறையில் செய்து பார்க்கிறேன்.,

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி :)

வினு
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.. நன்றி ;)

நஸீம்
ரொம்ப நன்றி ;)

இளையா
கண்டிப்பா செய்திட்டு சொல்லுங்க ;)

இளா
கண்டிப்பா சுஷாக்கு செய்து கொடுங்க.. மேடம் என்ன சொன்னாங்கனும் சொல்லுங்க :) ஹிஹ்ஹி நன்றி :)

ஸ்வரு
செய்திட்டு சொல்லோனும் :)
நன்றி டா

ஜெய்
அப்படியா.. சேர்த்து செய்து பார்த்திட்டு சொல்லுங்க :)
நன்றி டா

ஹர்ஷு
ரொம்ப நன்றி டா.. செய்து பாருங்க.. சாதத்திற்கு அருமையா இருக்கும்.. தக்காளியின் ஓரத்தை கட் செய்த வேஸ்ட் தான் அது ;)

சுஜா
நான் அடிக்கடி வேர்கடலை சேர்ப்பேன் டா.. காய்கறி, கலவை சாதம்னு.. செய்து பார்த்து சொல்லுங்க ;)

கவி
ரொம்ப நன்றி ;)

குமாரி
எனக்கு சட்னினா ரொம்ப பிடிக்கும்.. அதாவது சாதத்திற்கு பிசைந்து சாப்பிடும் சட்னி வகைகள் ;) நன்றி

சொபனா
ரொம்ப நன்றி.. தமிழில் போட்டு இருக்கிங்க.. செய்து பார்த்து சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா என் பெயர் சோபனா., சொபனா இல்லை., நான் அறுசுவைக்கும் சமையலுக்கும் புதுசு பா., இப்போ தான் ட்ரை பன்ரேன்., ரவா தோசை க்கு உங்க மல்லி சட்னி பண்ணினேன்., My hus really praise to me., taste is super., thanks pa.,

ரம்யா நானும் வேர்கடலை சேர்க்கமா உளுந்து கடலை பருப்பு புளி சேர்த்து தான் பண்ணுவேன் வேர்கடலை சட்னி தனியா தான் செய்வேன் ஆனா புதினால வேர்கடலை சேர்த்து பண்ணதில்லை பண்ணிட்டு சொல்றேன் இரண்டுமே எனக்கு பிடிக்கும் சட்னிக்கு என் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சட்னி அருமையாஅ இருக்கு ரம்யா

Jaleelakamal

ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க ;)
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

super.,pudina chutney good.

super

Very tasty