காலிஃப்ளவர் கூட்டு

தேதி: September 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
உரித்த பச்சைப் பட்டாணி - அரை கப்
துவரம்பருப்பு - கால் கப்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் (வறுக்க, தாளிக்க) - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - 1 சிறு துண்டு
கடலைப் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
துருவிய தேங்காய் - 5 மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி


 

காலிஃப்ளவரை சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் போட்டு வைத்து பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் காலிஃப்ளவரையும், பட்டாணியையும் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு வேக விடவும். தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்.
வறுக்க கொடுக்கப்பட்டுள்ள சாமான்களை 3 தேக்கரண்டி எண்ணெயில் வரிசையாக சிவக்க வறுக்கவும். அவற்றுடன் தேங்காயை சேர்த்து நைசாக அரைக்கவும். காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்து, தேங்காய் எண்ணெயில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்ததும் கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். சப்பாத்தியுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிட இந்தக் கூட்டு அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

புது ரெசிபி..யம்மி..என் லிஸ்ட்ல சேர்த்தாச்சு..நாளைக்கு சப்பாத்திக்கு இதான்,இதான் இதேதான்..செய்துட்டு சொல்றேன்..

இதுவும் கடந்துப் போகும்.

சூப்பர் குறிப்பு..... வாழ்த்துகள்......

yummy...... yummy

- அன்பே சிவம் -

வாவ்.. ஒரே சமயத்தில் இரண்டு குறிப்புகள் கொடுத்து இருக்கிங்க.. சூப்பரான டிஷ். செய்து பார்த்து சொல்கிறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

காலிஃப்ளவர் கூட்டு SUPER ......

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.

காளிஃப்ளவர் கூட்டு மணம் எங்க வீடு வரை வந்து வம்பிக்கிழுக்கு...சாப்பிடாம விட்டுருவேனா;-)

மிக்க நன்றி அருமையான குறிப்பு தந்தமைக்கு;-)

Don't Worry Be Happy.

எல்லாருக்கும் ரொம்ப நன்றி...

அருமை சுவையாக இருந்தது உங்கள் குறிப்புக்கு நன்றி