தேதி: June 26, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரவை - 1 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு மற்றும் சீரக பொடி - ஒரு ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
ரவையை பொன்னிறமாக வறுக்கவும். உளுந்தை லேசாக வறுத்து பொடிக்கவும்.
அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
நன்றாக காய்ந்த எண்ணெயில் சிறு உருண்டைகளாக உருட்டி போடவும்.
தீயை மிதமாக வைத்து நல்ல கலர் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
Comments
ஒரு முறை நான் சீடை செய்யும்பொது வெடித்து விட்டது
அன்புள்ள றேனுகாவிற்கு,
ஒரு முறை நான் சீடை செய்யும்பொழுது வெடித்து விட்டது, அதிலிருந்து எனக்கு சீடை செய்ய பயம், ஆனால் எனக்கு சீடை ரொம்ப பிடிக்கும். உங்கழுடைய குறிப்பை பார்த்தவுடன் சீடை செய்ய ஆசை. நீங்கள் கொடுத்துள்ள குறிப்பின் படி செய்தால் சீடை வெடிக்குமா?.
நன்றி,
சுகன்யா
நன்றி,
சுகன்யா