சிக்கன் சாப்ஸ்

தேதி: September 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

சிக்கன் (எலும்புடன்) - 1/2 கி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
சீரக மிளகுதூள் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
கறிவேப்பிலை


 

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிக்கன், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அதில் மிளகாய்தூள், மிளகு ஜீரகதூள், 3 கப் தண்ணீர் சேர்த்து மூடியிட்டு வேக வைக்கவும்..
சிக்கன் சாப்ஸை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்