செட்டிநாடு வாழை மசாலா

தேதி: September 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

 

வாழைக்காய் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
கடுகு, சீரகம், எண்ணெய் - தாளிக்க
அரைக்க:
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
சிறிய வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
தேங்காய் - சிறிது
மிளகு, சீரகம், சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தெளித்து அரைக்கவும்.
பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும்
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து நீர் தெளித்து வேக விடவும்.
வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான செட்டிநாட்டு வாழை மசாலா தயார்.

வாழைக்காயை எண்ணெயில் பொரித்து கூட சேர்க்கலாம். சற்று நீர்க்க செய்தால் க்ரேவியாக சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான்-வெஜ் ரேஞ்சுக்கு ஒரு வெஜ் ரெசிபி தானது இருக்கீங்க, நேத்து தான் வாழைக்காய் பன்னுனானாக்,அடுத்த முறை இப்படி பண்ணி பாக்கறேன்.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கவி,
செட்டிநாடு வாழை மசாலா பார்க்கவே ஜோரா இருக்கு!
இதுவரை இந்தமாதிரி அரைத்துவிட்ட மசாலா வாழைக்காய் செய்ததில்லை. அடுத்தமுறை வாழைக்காய் வாங்கும்போது கட்டாயம் உங்க‌ மெத்தட்தான்! வாழ்த்துக்கள் கவி!!

அன்புடன்
சுஸ்ரீ

செட்டிநாடு வாழை மசாலா செம சூப்பர்ப்பா கண்டிப்பா அடுத்தமுறை செஞ்சு பார்க்கிறேன் வாழ்த்துக்கள் கவி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் கூட முகப்பில் உள்ள போட்டோவை பார்த்துவிட்டு இது ஏதோ சிக்கன் போல என்று நினைத்து விட்டேன் (பெயரை பார்த்த பிறகும் தான்...வாழைக்காய் என்ன நம்ப சைவ மீன் தானே ;)).

சூப்பரான குறிப்பு...எனக்கு இப்படி காய்கறியில் ரிச்சாக செய்தால் ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் மிக்க நன்றி

சுகி,

அப்படியா இருக்கு??செய்துவிட்டு சொல்லுங்க..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

சுஸ்ரீ,

செய்துவிட்டு சொல்லுங்க..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஸ்வர்ணா,

கருணை கிழங்கிலும் இதே போலே செய்தால் நன்றாக இருக்கும்.செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

லாவண்யா,

சைவ மீன் ஐடியா நன்றாக இருக்கு.இந்த டிஷ்ஷை செட்டிநாடு கல்யாண விருந்தில் பார்க்கலாம்.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

காய்கறியில் இத்தனை வகை உங்களால் மட்டுமே செய்ய முடியும். அருமையா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு செட்டிநாடு உணவுனாலே தனிப்ரியம்தான்;) குறிப்பு மிக அருமை..செய்யத்தூண்டுகிறது;-)

வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

செட்டிநாடு வாழை மசாலா சூப்பர்.........

வாழ்த்துக்கள்

வனிதா மேடம்,
உங்களை விடவா?
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஜெயா,
அவர்களுக்கென்று தனி மசாலா ,தனி சுவை
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ப்ரியா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
வாழை மசாலா பார்க்கவே நல்லா இருக்கு.வாழைக்காய் இந்த முறையில் செய்ததில்லை.கண்டிப்பா செய்துட்டு பதிவிடுறேன்.வாழ்த்துக்கள்.

செட்டிநாடு வாழை மசாலா சூப்பர் வாழ்த்துக்கள்

அன்பரசி,

செய்துவிட்டு சொல்லுங்க..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

பாத்திமா அம்மா,

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

செட்டிநாடு வாழை மாசலா செய்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது சூப்பார் வாழ்த்துக்கள்.........

மிக அருமையாக வந்திருந்தது. கூடுதல் சுவைக்காக நான் எலுமிச்சம் பழச் சாறு சிறிது சேர்த்தேன்.
நன்றி. மேலும் இது போல் சுவை மிக்க மசாலாக்களை எதிர்பார்க்கிறேன்.