இனிப்பு கோதுமை போண்டா

தேதி: June 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - ஒரு கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கோதுமை மாவு சர்க்கரை இரண்டையும் கட்டி இல்லாமல் இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
சூடான எண்ணெயில் கரன்டியால் எடுத்து ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
நல்ல கலராக வரும் வரை திருப்பி திருப்பி போட்டு வேக விடவும்.
சூடாக சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணு,
இதுவும் பாடசாலைக்குக் கொண்டு போனேன்.
காலை இடைவேளையில் மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி விட்டு எடுக்க நன்றாக இருந்தது.
சுவையும் நன்று.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நேற்று நானும் இதை செய்தேன்,என் பையன் தினமும் செய்ய சொன்னான்,எனக்கு ஆறினால் தான் பிடிக்கும்,என்னவருக்கு சூடாக இருக்கனும்.இது முதன் முதலின் நான் செய்த இனிப்பு,சமைக்க கற்றது,அதனால் இதை அடிக்கடி செய்வேன்,நன்றி இமா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. இமா அவர்கள் தயாரித்த இனிப்பு கோதுமை போண்டாவின் படம்

<img src="files/pictures/aa318.jpg" alt="picture" />

இமா படம் சூப்பர்,எவ்வளவு அழகா இருக்கு,பார்த்ததும் சாப்பிட தோனுது,மிக்க நன்றி இமா,படம் இனைத்த அட்மினுக்கும் நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா