ஸ்பெஷல் சிக்கன் ப்ரை

தேதி: September 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (10 votes)

 

வறுத்த கோழி - 12 துண்டு
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முட்டை - 2
முந்திரிபருப்பு - 20 எண்ணிக்கை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 7 தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு போட்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
அதனுடன் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் வறுத்த கோழி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
மேலே வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும். சுவையான ஸ்பெஷல் சிக்கன் ஃப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்டகாசமா இருக்குங்க. வழக்கம் போல ரொம்பவே வித்தியாசமான குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very nice. Super recipe i include in my favourites

பாத்திமா கலர்ஃபுல் சிக்கன் செம சூப்பர்ர்ர்ர்.வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா அம்மா,

ஸ்டார் ஹோட்டல் குறிப்பு..
வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குவினருக்கு நன்றி

வனி முதல் பதிவிற்க்கும் வருகைக்கும் நன்றி

வருகைக்கு நன்றி

வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சிக்கன் வறுவல்ன்னு சொல்லி இருக்கீங்க இல்ல, சில்லி சிக்கன் மாதிரியா பண்ணனும்??

இது ஒன்னு மட்டுமே சந்தேகம், சுவையான குறிப்பு....வாழ்த்துக்கள்ம்மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி சிக்கன் 65 மாதிரி செய்யனும் வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றிடா வேற சந்தேகம் இருந்தா கேள்

நல்லா இருக்கு பாத்திமா வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அருமையான குறிப்பு பாத்திமா அம்மா.என் பையனுக்கு சிக்கன்னா ரொம்ப பிடிக்கும் இந்த முறையில் செய்து கொடுத்து அசத்தப்போறேன்.

உங்கள் குறிப்பு பார்த்து நேற்று செய்தேன் . ரொம்ப நல்லா ,இருந்தது. என்னவர் இன்னக்கு என்ன இப்படி அசத்திட்டனு கேட்டாங்க.ரொம்ப தாங்க்ஸ்மா.

வாழ்த்துக்கு நன்றி குமாரி

அசத்திட்டு வந்து சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

வருகைக்கும் செய்து பார்த்ததுக்கும் ரொம்ப நன்றிமா