மிளகாய் சிக்கன்

தேதி: September 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சிக்கன்
தக்காளி - 2
வெங்காயம் - 2
வரமிளகாய் - 8
இஞ்சி
பூண்டு
கொத்துமல்லித்தழை


 

சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
சிறிய பாத்திரத்தில் வரமிளகாய் மூழ்கும் வரை நீர் விட்டு, 5 -10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும், மிளகாய் மட்டும் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரைத்தவற்றை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
ஊறிய சிக்கனை கடாயில் சிறிது என்னை ஊற்றி லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்
அதன் பின், வடிகட்டி வைத்துள்ள வரமிளகாய் கரைசலை சேர்க்கவும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை போடவும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்த பின்பு, கொத்துமல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும். கார சாரமான மிளகாய் சிக்கன் ரெடி


சிக்கனுக்கு விரும்பாதவர்கள், காளான் வைத்து செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

கொத்தமல்லிக்கு கூட தலை இருக்கா? தேடிப் பார்க்கணும்... :)
ஏன் வரமிளகாயை வேகவைத்து அரைக்க வேண்டும்...கலர் எஃபக்டுக்காகவா?

படம் எடுக்கலியா?
அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

"ழ" ல கொஞ்சம் வீக்குதேன், என்ன பண்ண.. :-)
//ஏன் வரமிளகாயை வேகவைத்து அரைக்க வேண்டும்...கலர் எஃபக்டுக்காகவா//// - காரத்துக்கு வேற எதையும் சேர்க்காமல், மிளகாய் மட்டுமே சேர்பதால் காரம் (அ ஊ எ ஏ இ.... ) ன்னு இருக்கும், கலர் கிடைக்க இல்ல.

////படம் எடுக்கலியா?/// - பின்னாடி வந்துட்டே இருக்கு, வந்துடும் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

come to gmail jevanrelax@gmail.com.... ithula onumae puriyala pa... pls come now.