தேங்காய் போளி

தேதி: September 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (14 votes)

 

கடலைப் பருப்பு - ஒரு கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
மைதா மாவு - 1 1/2 கப்
ஏலக்காய் - 10
கேசரி பௌடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - சிறிதளவு
நெய் - போளிகளில் தடவ தேவையான அளவு


 

தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்யவும்.
மைதாமாவுடன் கேசரி பௌடர், உப்பு சேர்த்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.
கடலைப் பருப்பை கால் மணி நேரம் நீரில் ஊற வைத்து, கையால் நசுங்கும் பதத்துக்கு வேக விடவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் கரைந்து எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியானதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஏலப்பொடியை கலந்து நன்கு பிசையவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவையும், பூரணத்தையும் சரி அளவாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாழை இலை அல்லது திக்கான ப்ளாஸ்டிக் பேப்பர் எடுத்து நல்லெண்ணெயை நன்கு தடவி, அதன் மேல் ஒரு மைதா உருண்டையை வைத்து கையால் சிறிய வட்டமாக்கவும். அதில் ஒரு பூரண உருண்டையை வைக்கவும்.
பூரணத்தை நடுவில் வைத்ததும் நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும்.
இந்த உருண்டையை வட்ட போளிகளாகத் தட்டவும்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெயைத் தடவி தட்டிய போளியை அதில் போடவும்.
சற்று வெந்தபின் திருப்பிப் போட்டு வேக விடவும். இரு பக்கமும் நெய்யைத் தடவி எடுத்து வைக்கவும். கேஸை சிம்மில் வைக்கவும். பெரிதாக வைத்தால் தீய்ந்து விடும்.
சூடாகவும், ஆற வைத்தும் சாப்பிட சூப்பர் போளி தயார். மிக சுலபமாக செய்யக் கூடிய நமது பாரம்பரிய இனிப்பு இது. இந்த வருட தீபாவளிக்கு போளியை செய்து எல்லாரையும் அசத்துங்கள் தோழிகளே.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்பே சூப்பர் ஹா இனிப்போட தொடங்கி இருக்கீங்க, வாழ்த்துக்கள், படங்களும் விளக்கங்களும் அருமையிலும் அருமை,. இன்னும் நிறையா சுவையான குறிப்பு தரனும்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இது இரண்டாவது குறிப்புனு நினைக்கிறேன் தேங்காய் பர்பி தானே முதல்குறிப்பு உங்களுக்கு ஆன்ட்டி அப்றம் நன்றி வாழ்த்துகள் போளிக்கு கண்டிப்பா ட்ரை பண்றேன் ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப நல்லா இருக்கு. போளி ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் இன்னைக்குகிடைச்சிடுச்சு நாளைக்கு செய்துட வேண்டியதுதான். ப்ரசன்டேஷன் சூப்பர்ப்.

இப்படிக்கு ராணிநிக்சன்

தேங்காய் போளி ரொம்ப அருமை எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்விட் :)) நானும் இதே முறையில்தான் செய்வேன் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் செஞ்சுருக்கீங்க வாழ்த்துக்கள்.... இந்த குறிப்பை நானும் அனுப்பனும்னு நினைச்சேன் :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இது எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு.உங்களின் அழகான தெளிவான செய்முறை விளக்கத்தை பார்த்ததும், சென்னையில் இருக்கும் போது Venkateswara Boli stalla அடிக்கடி வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது. ஹ்ம்ம்... Thanks for sharing traditional receipe.

99% Complete is 100% Incomplete.

உங்க தேங்காய் போளி செய்முறை சூப்பர்! எங்கம்மா செய்வதும் இதேபோலத்தான், எக்ஸ்சாட்டா சேம்! சொன்னா நம்பமாட்டிங்க, நானும்கூட இந்த ரெஸிப்பி போட்டோஸ் எடுத்து அனுப்பலாமென்று இருந்தேன்! :) அருமையா, தெளிவா இருக்கு உங்க படங்கள்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

என் கணவருக்கு போளி பிடிக்கும் கண்டிப்பா செய்து பார்ப்பேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அருமையான, ஈசியான, தெளிவான, சுவையான குறிப்பு... செய்துபார்த்துவிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்........

God bless us.

hi, very nice receipe , i like it so much , i will try next week.

god is love

இதை தான் எதிர்பார்த்தேன். அம்மாக்கிட்ட கேக்கனும்னு நினைத்தேன் இனி தேவையில்லை. எனக்கு ரொம்பவே இஷ்டமான பலகாரம். கண்டிப்பா செய்து பார்த்து உங்களிடம் சொல்றேன். வாழ்த்துக்கள்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதா மேடம்,
அழகா செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

படித்து ரசித்த, செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்ந்த அத்தனை தோழிகளுக்கும் மிக்க நன்றி...

நீங்கள் செய்து வைத்திருப்பதை பார்த்தாலே சாப்பிட தூண்டுது. அழகாக செய்து அருமையாக பிரசன்ட் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

unga recipie supper.seithu paarthaen yellarukum nalla pidithathu . neenga saudi la yenga erukinga

ur receipe is very good....saudi karanga kalakuranga pa

Hi
Easya solli irukeenga, thank you, try pannaporen..Boli enaku romba pidikum

அபுநிஷா...போளி செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி...நான் இருப்பது சவுதியில் இல்லை...சென்னையில்...
ஜய்லா, லதா....பாராட்டுக்கு நன்றி...