மிளகாய் சிக்கன்

தேதி: September 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (12 votes)

 

சிக்கன்
தக்காளி - 2
வெங்காயம் - 2
வரமிளகாய் - 8
இஞ்சி
பூண்டு
கொத்தமல்லி தழை


 

சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
சிறிய பாத்திரத்தில் வரமிளகாய் மூழ்கும் வரை நீர் விட்டு, 5 -10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும், மிளகாய் மட்டும் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரைத்தவற்றை படத்தில் உள்ளது போல், வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
ஊறிய சிக்கனை கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
அதன் பின், வடிகட்டி வைத்துள்ள வரமிளகாய் கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை போடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்த பின்பு, கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும். கார சாரமான மிளகாய் சிக்கன் ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் என எல்லா உணவிற்கும் ஏத்த சைடு டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல காரசாரமான குறிப்பு. நாக்கில் எச்சில் ஊறுது. வாழ்த்துக்கள்பா.

அட இப்பதானே சாப்பிட்டு வந்தேன் ..இத பார்ததும் திரும்பவும் பசிக்குதே...!! :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

சுகி நல்ல காரமான ரெசிப்பி கடைசி படத்த பார்க்கும்போதே தெரிகிறது. செய்முறையும் ஈஸியா இருக்கு வாழ்த்துக்கள். தேவையானப்பொருட்களின் சரியான அளவு கொடுத்து இருக்கலாம்.

சீக்கரமே குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி நன்றி...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அடடா! ! ! ஹோட்டல் சிக்கன் சம்பூர்ணாக்குதான் வந்துட்டேனா !!

ப்ரசண்டேசன் மிக அருமை...சுகி சூப்பர்மா..இதோ இப்போதைக்கு விருப்பமான குறிப்புகளில் சேர்த்துக்கறேன் இந்த மாதம் போகட்டும் ஒரு வெட்டு வெட்டரேன்;-))

Don't Worry Be Happy.

நசீம் - முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி, ... மிகவும் கார சாரம் தான்.பண்ணிப்பாருங்க...

ஜெய்லானி - உங்க பேரு சரியான்னு தெரியல, தப்பா இருந்தா மன்னிக்கணும். நைட் சாப்பிடும் போது பண்ணிப்பாத்துடுங்க... வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சரி தான், நான் எதோ அவசரத்தில் அனுப்பிட்டேன். இது ஓகே ன்னு பாரு டா?

சிக்கன் - 1 /4 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
வரமிளகாய் - 8
இஞ்சி, பூண்டு - சிறு துண்டு

சீக்கரம் செய்ய கூடிய, ருசியான டிஷ் டா, உன் வாழ்த்து இல்லாத குறிப்பே இருக்காது, நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஈஸியான குறிப்பு வாழ்த்துகள் ப்ரஸன்டெஷன் அருமைபா கலர்புல்லா இருக்கு இந்த மாதம் முடிந்ததும் செஞ்சிடுறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இது எங்க அப்பாவின் ரகசிய குறிப்பு, ஒரு வழியா அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன், இப்ப உங்களுக்கு சொல்லிட்டேன் :-)

இதோட டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு சொல்றத விட,பண்ணி பாருங்க ஜெய், சூப்பர் ஹா இருக்கும்.

சேம் பின்ச், எதுக்குன்னு பாக்கறீங்களா? நானும் இந்த மாசம் சிக்கன் சாப்பிடமாட்டேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேணுக்கும் சேம் பின்ச், கண்டிப்பா பண்ணி பாருங்க.வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வெரி குட் இப்போ ஓகே. குறிப்பு நல்லா இருக்கு அளவு சரியா தெரிஞ்சாதானே செய்து பார்த்து சுவை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க முடியும். புரட்டாசி மாசமனால விருப்பமான குறிப்புல இருக்கு:(

நான் தான் சிக்கன் சாப்பிட முடியாத சோகம்ன்னு பாத்தா, எனக்கு துணையா நிறையா பேர் இருக்கீங்க...
இ இ இ இ, , ,,, சந்தோசம் :-)
கண்டிப்பா பண்ணிப்பாருடா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி.... இவ்ளோ ஈசியா ஒரு சிக்கன் குறிப்பா.... சூப்பர்.... கண்டிப்பா நாளைக்கு செய்துடறேன்... சளி வேற பிடிச்சிருக்கு... காரசாரமான சிக்கன் குறிப்பு... எப்படி செய்யாம விடறது.... இந்த புரட்டாசி மாசம்லாம் எனக்கு கிடையாது பா..... :))

வித்யா பிரவீன்குமார்... :)

ஸ்ஸ்ஸ் அப்பா.. காரசாரமான சிக்கன்.. சூப்பர் :)
கலர்ஃபுலா இருக்கு.. வித்தியாசமான குறிப்பு.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகி,

ஸ்ஸ்ஸ்..சூப்பர்..:)
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் குறிப்பு பட்டைகிராம்பு சேர்க்கவேண்டாமா? வாழ்த்துக்கள்டா

சளி வேறையா? ஹ்ம்ம் இதை பண்ணி சாப்பிட்டு பாருங்க, சளி எல்லாம் தள்ளி நிக்கும், கண்டிப்பா பண்ணிட்டு வந்து பதிவு தரனும்.நான் காத்திருப்பேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஸ்ஸ்ஸ் - இன்னும் ஒரு ஸ்ஸ்ஸ் சேத்திக்கோங்க, அவளோ காரமா இருக்கும்.கண்டிப்பா பண்ணி பாருங்க. வாழ்த்துக்கு நன்றி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கவி வாழ்த்துக்கு மிக்க நன்றி.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பட்டைகிராம்பு தேவை இல்லை, ஒரு வேலை உங்களுக்கு அந்த வாசனை பிடிக்கும்ன்னா சேத்திக்கோங்க...வாழ்த்துக்கு நன்றி :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சிக்கனில் வித்தியாசமான குறிப்பு இது சுகா.வாழ்த்துக்கள்பா.செய்து பார்த்துவிட்டு சொல்றேன்பா.

வாழ்த்துக்கு மிக்க நன்றி.பண்ணி பாத்துட்டு சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

காரசமான குறிப்பு. பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

சுகி மிளகாய் சிக்கன் பேரை படிக்கும்போதே செம ஹாட் மச்சி :)

கடைசி படத்த பார்க்கும்போது உடனே செய்து சாப்பிடனும்னு தோனுது ஆனால் புரட்டாசி மாதம் கையை கட்டிபோட்டுடுச்சி :(( வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி, கண்டிப்பா பண்ணிப்பாருங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நலமா? ரொம்பநாளைக்கு அப்பறம் பேசறோம்..
உங்களையுமா புரட்டாசி கட்டிபோட்டுடுச்சி... பரவால விடுங்க. முடுஞ்சதும் ஒரு கட்டு கட்டீடுங்க :-)
வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அப்பா கிட்டேயிருந்து குறிப்பை சுட்டா தப்பேயில்லை....சூப்பரா இருக்கு....(அப்போ வீட்டில் அடிக்கடி நளபாகம் தானோ? )

மேலும் சுவையான ரகசிய குறிப்புகளை சுட்டு எங்களுக்கு தாங்க பார்ப்போம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுகி,
மிளகாய் சிக்கன் பார்க்கும்போதே காரசாரமா சூப்பரா தெரியுது! கொஞ்சநாள் போகட்டும் (இங்கேயும் அதே, அதே... புரட்டாசி! :)) செய்து பார்த்திடறேன்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அப்பாவின் சமையல் வரும் நாள் எல்லாமே நளபாகம் தான்.
இனிமேல் அப்பா சமையலை சுடறது தான் மெயின் வேலை. வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்துக்கு நன்றி, பண்ணிபாத்துட்டு மறக்காம வந்து சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

super pa

இந்த dish செய்து பார்தேன்... மிகவும் சுவையாக இருந்தது... எப்படி cooking recipe பதிவு (upload) செய்வதுனு கொஞ்சம் சொல்லுங்க pls...

நிறைய மசாலா ஐட்டங்கள் இல்லாததால வித்தியாசமான சுவை ... காரம்தான்....ம்..ஆ.....அச்சூங்......ஓன்னுமில்ல தும்மல் :-)))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

hi

hi suganthi
u r very good for cooking.i love ur dish.

Hi, I tried your receipe and turned out very good and simple to make. My wife and friends enjoyed a lot. Thanks for your wonderful receipe.

Kumaran