உடுப்பி சாம்பார்

தேதி: September 27, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

வேகவைத்து மசித்த துவரம் பருப்பு - 1/2 கப்
முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ - 1/4 கி
சின்ன வெங்காயம் (முழுதாக) - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
புளிச்சாறு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

வறுத்து அரைக்க
உளுந்து - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மல்லி - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 1 கப்


 

பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாற வதக்கவும்.
காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்
புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிட்டு
கடுகு, கறிவேபிலை, வரமிளகாய் தாளிக்கவும்.
கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

உடுப்பி சம்பாரா சூப்பர் கண்டிப்பா செய்து பாக்குரேன் வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

கண்டிப்பா செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க. பதிவிட்டதற்கு நன்றி பல்கிஸ்

KEEP SMILING ALWAYS :-)

taste ah erundhudhu .

செய்து பார்த்து கருத்து தெரிவித்ததற்கு மிக்கநன்றி பெனசிர் :-)

KEEP SMILING ALWAYS :-)