பிசிபேளாபாத்

தேதி: September 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (27 votes)

 

சாதம் - இரண்டு கப்
துவரம்பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
காய்கறி கலவை - தேவையான அளவு
பெருங்காயம் - விருப்பமான அளவு
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
புளி - ஒரு தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு- தேவையான அளவு
கறிவேப்பில்லை, கொத்தமல்லி


 

காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதம் இரண்டு கப் வடித்து வைக்கவும்.
பருப்பை கழுவி அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்கறி கலவை, மஞ்சள் தூள், சிறிது எண்ணெய் சேர்த்து நான்கு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.
வெந்த பருப்பு காய்களுடன் சாதத்தை சேர்த்து உப்பு மிளகாய் தூள், புளி சேர்த்து மீண்டும் மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி பின் சாதத்துடன் விருப்பமான அளவு நெய் சேர்த்து கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து சாதத்துடன் சேர்க்கவும். (பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.)
மீண்டும் கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும்.
சூடான சுவையான பிசிபேளாபாத் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குமாரி அக்கா உங்க குறிப்பு ரொம்ப அருமையா இருக்கு ஒரு பிளேட் பார்சல் போடா முடியுமா by Elaya.G

உங்க குறிப்பு வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள்

வீட்டு முறை சமையலில் உங்களை மிஞ்ச முடியுமா? எப்பவும் போல சூப்பர், வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Suvaya kurippu ma,vaalththukkal.

குமாரி அக்கா பிஸிபேளாபாத் சூப்பர்., வாழ்த்துக்கள் அக்கா.,

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இளையா உங்களுக்கு இல்லாததா எவ்ளோ வேணுமோ அனுப்பி வைக்கிறேன்.நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மெர்சானா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பாராட்டுக்கு ரொம்பவே நன்றி சுகி .உங்க மிளகாய் சிக்கன் தான் இன்னைக்கு செய்ய போறேன் செய்துட்டு பதிவிடுகிறேன். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தேவி உங்கள் வாழ்த்துக்கு நன்றி பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சோபனா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,

பிஸிபேளாபாத் வாசனை இங்கேவரை மணக்குது! நல்ல குறிப்பு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ மிக்க நன்றி பா.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி வாழ்த்துகள் பா அருமையாக உள்ளது முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்தால் இன்னும் சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குமாரி உங்க குறிப்பு அருமை,படங்கள் அதை விட சூப்பர்பா.பிசிபேளா பாத் என்றாலே செய்முறை கஷ்டமாயிருக்கும் உங்க செய்முறை எளிமையாயிருக்கு.வாழ்த்துக்கள்.

kumari sister, unga samayal super..... seithu parthen. rompavum testya irunthathu. thank you .....sister

குமாரி சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள்.

ஒரு வார்த்தை கவிதை "நீ"

குமாரி அக்கா முதல் படமே கலக்கலா இருக்கு.. :-) பார்க்க ரொம்ப சுவையா இருக்கும் போல தெரியுது நாளைக்கு செய்துட்டு சொல்றேன். :-)

KEEP SMILING ALWAYS :-)

Arumayana kuripu viraivil seithu parthuttu pthividukiren.

குமாரி அக்கா, பிசிபேளாபாத் சுவையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

குமாரி,
பிஸிபேளாபாத்,சூப்பரா இருக்கு.பருப்பு மற்றும் காய்களுடன் சாதம் சேர்த்து வேக வைப்பது நல்ல ஐடியா.கண்டிப்பா ட்ரை பண்றேன்.5 ஸ்டாரும் கொடுத்துட்டேன்.வாழ்த்துக்கள்.

என் கணவர் முந்திரி சாப்பிட மாட்டார் ஆனால் எனக்கு பிடிக்கும் கண்டிப்பா செய்து பார்க்கிறேன் .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேணு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுந்தரி எல்லோருமே கஷ்டம்னு தான் சொல்வாங்க. அது வேற முறை அனைத்து காயையும் நல்லெண்ணெயில் வதக்கி பருப்பும் அரிசியும் ஒன்னாக வேகவைத்து பின் எல்லாவற்றையும் சேர்த்து அப்படி நீளும் அந்த முறைக்கு இது நமக்கு செய்ய ரொம்பவே எளிய முறை அதான் இப்படி அனுப்பி வைத்தேன். சீக்கிரம் புரியும் செய்வதும் சுலபம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வானதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டா.

அதுக்குள் செய்து பார்துடிங்களா சுவை பிடித்ததா .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நாகா செய்வது ரொம்ப ஈசியா தான் இருக்கும் நாளைக்கு செய்துட்டு மறக்காம வந்து சொல்லணும்.வாழ்த்துக்கு நன்றி டா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஜானு செய்வது ரொம்ப ஈசியா தான் இருக்கும். செய்துட்டு மறக்காம வந்து சொல்லுங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்துட்டு சுவைத்து மறக்காம பின்னூட்டம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி மா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு வாழ்த்துக்கும் ஐந்து ஸ்டார் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி .அபோ கண்டிப்பா செய்து பாருங்க, இம்முறையில் செய்து பார்த்துவிட்டு பிடித்ததான்னு சொல்லுங்க அன்பு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அக்கா இப்போ பிசிபேளாபாத் செஞ்சுருக்கேன்... சூப்ப்ப்ப்பரா வந்துருக்கு.... ரொம்ப டேஸ்டா இருக்கு :-) ஈஸி ரெசிப்பிக்கு தேங்க்ஸ்கா

KEEP SMILING ALWAYS :-)

குமாரி பிஸிபேளாபாத் சூப்பர்., வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிஸிபேளாபாத் சூப்பர். இந்த செய்முறை மிகவும் சுலபமா இருக்கு வாழ்த்துக்கள்.

நான் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன் சாதம் மீதமானால் இப்படியும் செய்யலாம் இது மாதிரியும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

செய்து பார்தேன் அக்கா, மிகவும் சுவையாக இருந்தது.முதல் முறையாக செய்தேன்.சுவை வித்யாசமாக இருந்தது. ரொம்ப நன்றி அக்கா.

குமாரி,
என்னுடைய favourite டிஷ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Really i want 2 say thanks to ur receipe its very simple and tasty recipe.........

vaishnavi

நாகா அதுக்குள்ளே சமைச்சி சாப்டாச்சா வாழ்த்துக்கள்.. சுட சுட அப்பளத்தோட சாப்பிட்டா தனி ருசி தான்.செய்து பார்க்கிறேன்னு சொல்லி உடனே செய்து மறக்காம பதிவிட்டதுக்கு நன்றி டா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்வர்ணா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுலபமாக தான் இருக்கும் வினோ செய்வதற்கும்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இம்முறையில் செய்து பாருங்க பாத்திமா நல்லா இருக்கும்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வானதி செய்து பார்த்து சுவையும் பிடித்ததா சொன்னதை கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மா.நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவி வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி .உங்களுக்கும் பிடிக்குமா,என் கணவருக்கு ரொம்ப பிடித்த உணவு இது.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வைசுசெந்தில் வருக்கைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் குமாரி

சூப்பராக உள்ளது நீங்கள் சொன்ன பிசிபெல்லாபாத்.செய்து திருப்தியாக சாபிட்டோம்.
மிகவும் நன்றி இதுப்போன்ற சுலபமாக செய்ய சொல்லி தருவதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள் .

பிசிபேளாபாத் செய்து பார்த்து சுவையும் பிடித்ததா சொன்னதை கேக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மா.நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வணக்கம் மேடம், இன்று நான் பிசிபேளாபாத் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது.

வணக்கம் மேடம், இன்று நான் பிசிபேளாபாத் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது.

ஹாய் அஜந்தா செய்து பார்த்து மறக்காம பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நேற்று உங்க பிசிபேளாபாத் பண்ணினேன்... ரொம்ப சூப்பரா வந்தது.... சுவையும் அருமை... பிசிபேளாபாத்னாலே ரொம்ப லாங் ப்ராசஸா இருக்கும்னு அடிக்கடி ட்ரை பண்றதே கிடையாது... ஆனால் உங்க செய்முறை ரொம்ப சுலபம், இனிமேல் நானும் அடிக்கடி இந்த சாதம் செய்து சாப்பிடுவேன் :)

அனேக அன்புடன்
ஜெயந்தி

சஜ்வீணா ரொம்ப சந்தோசம் பா.செய்ததோடு மட்டும் நிறுத்தாமல் அதை என்னோடு பகிர்ந்துகொண்டதுக்கு மிக்க நன்றி..ஆமாம் லன்ச் என் கணவருக்கு செய்து கொடுக்கும் அளவுக்கு ஈஸி ஆபீஸ் குடுத்தும் அனுப்புவேன்.அடிக்கடி செய்துபாருங்க பழகிடும்.

நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪