கெட்டி குழம்பு

தேதி: June 28, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - நூறு கிராம்
பூண்டு - பத்து பல்
புளி - பெரிய எலுமிச்சையளவு
துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - இரண்டு டீஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க:
வரமிளகாய் - ஏழு
மல்லி விதை - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஊளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்


 

புளியை இருநூற்றைம்பது மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
அரைக்க வைத்துள்ளவற்றை சிவக்க எண்ணெய் விடாமல் வறுத்து அரைக்கவும்.
அரைத்த விழுது, உப்பு, புளி மூன்றையும் ஒன்றாக கலக்கி வைக்கவும்.
வெங்காயம், கத்தரிக்காயை குறுக்காக நான்காகவும், பூண்டை ஒன்றிரண்டாக தட்டியும் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போட்டு வெடித்து சிவந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பாதி வதங்கியதும் பெருங்காயத்தூள், மஞ்சள் பொடி, கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
காய் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்து பச்சை வாசனை போனதும் அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

chettinadu kulambil perungayam serka maataarkale!!!!!! (iyer veedukalil serparkal. melum sambaaril thaan perungayam serparakal. This is just for information)