அம்மாவாசை அன்று பெண் குழந்தை பிறந்தால் என்ன

27.09.2011அன்று எனக்கு பென் குழந்தை பிறந்து இருக்கின்றது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்.ஆனால் என் அன்னன் சொல்கிறார் அம்மாவசை அன்று பிள்ளை பிறந்தால் நல்லது அல்ல என்று......நான் குழப்பத்தில் இருக்கிறன்றன்... எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.....

இருள் விலகி ஒளி பிறக்குதுன்னு அர்த்தம்;-)

வீண் குழப்பம் வேண்டாம் குழந்தையோடு மகிழ்ச்சியா இருங்க;-)

Don't Worry Be Happy.

ennapa intha kalathila poi,ammavasai na light podamaiya irukirom,athu oru light ok.

குழப்பம் வேண்டாம். நல்லது கெட்டது மனிதர் எல்லோருக்கும் உள்ளது. இதற்கு அமாவாசை, பௌர்ணமி எல்லாம் கிடையாது.
யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

ammavasai anru pillai piranthal nallatu illaithan , ana yaaruku ?????
ammavasai anru mattum illai enru piranthalum pen kulanthai piranthal amma vuku nallathu.....
every 1 second 4 babies are born, just think how many babies are born on ammavasai... atleast half of them are girl babies ...
dont worry abt such myths..
just think of those longing for babies for years and years!!!!
be happy with the god given gift...
enjoying with ur baby.. my wishes to u and ur baby.

yellam nanmaike!!!!

அமாவாசையில் ஆரம்பித்தால் எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. என்னோட தோழி ஆடி அமாவாசை செவ்வாய்கிழமை பிறந்தவள். அவள் படிப்பு, விளையாட்டு, கைவேலைப்பாடு என்று அனைத்திலும் மிகவும் சுட்டி. எங்கள் குழுவில் அவளுக்குதான் முதலில் வேலை கிடைத்தது. இப்பொழுது திருமணம் முடிந்து நல்ல முறையில் வாழ்க்கையை தொடருகிறாள். அதுனால பயப்படாதீங்க. உங்கள் மகாராணி உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் :-)

KEEP SMILING ALWAYS :-)

குழந்தை ஆரோக்கியமா பிறக்கலைனா தான் சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் குழந்தை உட்பட நல்லதில்லை.. யோசிச்சு பாருங்க.. குட்டி பாப்பாவோட சந்தோசமா இருங்க.. இமா சொல்ற மாதிரி, வெள்ளிக்கிழமையில் சரியான நேரத்தில் பிறக்கும் பிள்ளைக்கு மட்டும் என்ன கஷ்டம் வராமலா இருக்கு.. :)

குழப்பம் இல்லாமா அவங்களை எப்படி எப்படி எல்லாம் வளர்க்க போறோம்னு ப்ளான் பண்ணி சந்தோசமா இருங்க.. குழந்தைக்காக இதே தளத்தில் எத்தனை பேர் பதிவு போட்டு இருக்காங்க பாருங்க.. :) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்போ அம்மாவாசை அன்று ஆண்பிள்ளை பிறந்தால் ஒன்றுமில்லையா? அது எப்படிங்க நல்லது கேட்டதுக்கு கூட ஆண்பால் பெண்பால் என்று இருக்கா?
இதெல்லாம் ஆதாரமில்லாத கூற்று.
இதில் குழம்புவதற்கு என்று என்னவுள்ளது. உங்களின் குழந்தை, அதை வளர்க்கபோகிறவர் நீங்கள் தான் அதனால் வீணான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு குழந்தையுடன் கழிக்க போகும் நாழிகளை வீணாக்காதீர்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அமாவசை பௌர்ணமி பாட்டி அம்மை எமகண்டம் ராவு காலம் எல்லாம் நல்ல காலம் தான். குழந்தை வளர நல்ல அம்மாவாக அப்பாவாக நீங்கள் இருந்தால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும். பெரியவர்களை அவப்போது பாட்டி வைத்தியதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் - இதுபோன்ற கருத்துகளை குழந்தைக்கு அருகில் பேச தடை விதியுங்க - இப்போதே குழந்தை மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைத்து விடும் - அமாவசை நிகழ்வுகளை குழந்தையின் அறிவுக்கு எட்டாதவாறு பார்த்துக்கொண்டு நல்ல அம்மாவாக இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

எனக்காக கருத்து தெரிவித்த A.Rajalakshimi,Hemalini.sr, Imma,Lavanyasathiya, Naga ram, Ramya karthik, nr.Scorp,Pabu nadesan.. போன்ற உயர்ந்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி........உங்களது கருத்து மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது.....நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்...கட்ந்த 10 நாட்கள் leave எடுத்து என் குழந்தையோடு பொழுதை கழித்தேன்....நாங்கள் எங்கள் பிள்ளைக்கு SAKHANA JEMI என்று பெயர் வைத்து உள்ளோம்......என் மனைவி உங்கள் எல்லோருக்கும் நன்றி கூற சொன்னாள்..... மிக்க நன்றி....

பத்தாவது முறை விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டு சொன்னது....ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என்று.......

மேலும் சில பதிவுகள்