முளைக்கீரைகோஸ்பொரியல்

தேதி: September 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கீரை.......1கட்டு

கோஸ்..........50கிராம்

பாசிப்பருப்பு........50கிராம்

சின்னவெங்காயம்......15

தேங்காய்துருவல்......3டீஸ்பூன்

பட்டை வத்தல்........3

கடுகு,உளுந்து......1டீஸ்பூன்

சீரகம்.....கால் டீஸ்பூன்

எண்ணெய்.......1டீஸ்பூன்

உப்பு....தேவைக்கு


 

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அலசி வைக்கவும் கோஸைபொடியாக
நறுக்கி கழுவி வேகவைத்துக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்

பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, உளுந்து,வத்தல் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி

அதனுடன் கீரையைபோட்டு கிளறி மூடி சிறுதீயில் வேகவிடவும் வெந்ததும் வேகவைத்த கோஸ்,பாசிப்பருப்பு உப்பு சேர்த்து கிளறி தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும்

சுவையான முளைக்கீரை கோஸ்பொரியல்ரெடி


மேலும் சில குறிப்புகள்