பிடிகருணை புளிக்குழம்பு

தேதி: September 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பிடிகருணை.....கால் கிலோ

புளி......சின்ன எலுமிச்சை அளவு

வெங்காயம்......1சிறியது

பச்சைமிளகாய்....1

கறிவேப்பிலை......சிறிது

தக்காளி.......1

மல்லிதூள்......2டீஸ்பூன்

சீரகத்தூள்........1டீஸ்பூன்

மிளகாய்த்தூள்......1டீஸ்பூன்

மஞ்சள்தூள்....சிறிது

உப்பு.....தேவைக்கு

கடுகு......1டீஸ்பூன்

வெந்தயம்......கால் டீஸ்பூன்

எண்ணெய்......ஒரு குழிகரண்டி

பெருங்காயத்தூள்.......சிறிது

அரைக்க

வெங்காயம் .......பாதி

தக்காளி.........பாதி

தேங்காய்........சிறுதுண்டு


 

கிழங்கை வேகவைத்து தோல் எடுத்து வட்டமாக நறுக்கி வைக்கவும்

புளியைகரைத்து அதில் மல்லிதூள்,சீரகத்தூள் உப்பு பாதி தக்காளி சேர்த்து பிசைந்து வைக்கவும்

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும்

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம்,வெங்காயம்,கறிவேப்பிலை மிளகாய்,மிளகாய்த்தூள் பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த விழுதைப்போட்டு வதக்கி

அதனுடன் புளிகரைசலை ஊற்றி ஒரு கொதி வரவும் கிழங்கைபோட்டு பச்சை வாசனைபோகும் வரை கொதிக்கவிட்டு பின் சிறு தீயில் சிறிது நேரம்வைத்து மல்லி இலை சேர்த்து இறக்கவும்


கிழங்கை குக்கரில் வேகவைக்கும் பொழுது சிறிது புளி சேர்த்துக்கொண்டால் குக்கர் நிறம் மாறாது

மேலும் சில குறிப்புகள்