தக்காளி பருப்பு கூட்டு

தேதி: September 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

பெங்களூர் தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 100
பாசிப்பருப்பு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி தழை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கவும்.
பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்
மல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான தக்காளி பருப்பு கூட்டு ரெடி

இது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன் சிறிது நெய் விட்டு சாதத்துக்கும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

One day three recipes. Ur tips are very nice. I will try this.

ஃபாத்திமா அம்மா,
காய்கறி ஏதும் போடாமல் உடனே செய்யக் கூடிய ரெசிப்பி.படங்களும் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

சூப்பரான ஈசியான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் வருகைக்கு நன்றி செய்துட்டு சொல்லுங்கள் தமிழில் டைப் பண்ணுங்கள்
கீழே எழுத்துதவின்னு இருக்கு முயற்ச்சி செய்யுங்கள் நன்றி

அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஸ்வர்ணா வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி

தக்காளி தொக்கு மட்டுமே வெச்சி சாப்டாம கூட பருப்பு சேர்த்து கூட்டு போல செய்து காட்டியிருக்கீங்க வாழ்த்துகள்மா நல்ல வித்தியாசமான குறிப்பு நன்றிமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பாத்திமா அம்மா,

எளிய குறிப்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுவையான கூட்டு வாழ்த்துக்கள் பாத்திமா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர் மா

பாத்திமாம்மா இன்னைக்கு இட்லிக்கு செஞ்சேன் சூப்பரா இருந்துச்சுமா.ரொம்ப டேஸ்டா இருந்துச்சு. மீதம் கொஞ்சம் இருக்கு. அத சாதத்திற்கு வச்சிருக்கேன். தாங்க்ஸ்மா. இன்னும் நிறைய டேஸ்டான குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கு நன்றிமா

ரொம்ப சந்தோசம்டா வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றிடா