தண்டு சட்னி

தேதி: September 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வாழைத்தண்டு - பொடியாக நறுக்கியது
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - அரை கப்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை


 

பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனியே கலக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

பிறகு, பொட்டுக்கடலை மாவு கலவையை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

First time i heared your recipe.so i will try your recipe.keep it up. regards.g.gomathi.

நினைச்சுட்டே இருந்தேன், ரொம்பநாளா ஒரு ஆள் காணோமேன்னு.... இந்த சட்னி கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். காரம் கொஞ்சம் தூக்கலா போட்டு பண்ணி பாருங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***