மணத்தக்காளி கீரைக் குழம்பு

தேதி: June 28, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மணத்தக்காளிக் கீரை - ஒரு பெரிய கட்டு
துவரம் பருப்பு - நூறு கிராம்
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய் - ஆறு
பூண்டு - மூன்று சிறிய பல்
புளி - சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


 

முதலில் கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். துவரம் பருப்பை இருநூறு மில்லி தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்ததும் நிறுத்தி வெயிட்டை எடுத்து விட்டு பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து மீண்டும் இரண்டு விசிலுக்கு வேக விடவும்.
இறக்கி மத்தால் நன்றாக மசித்து வைக்கவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
வெங்காயம், மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பின் கீரைக் கலவையை ஊற்றி மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய் கிள்ளிப் போட்டு கடுகு,உளுத்தம் பருப்பு, சீரகம் வெடிக்க விட்டு இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறுக மூடி வைக்கவும்.


மணத்தக்காளி கீரை அல்லது மிளகு தக்காளி கீரை எனப்படும் இந்தக் கீரை வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணிற்கு நல்ல மருந்து.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Chitra,
This recipe is really too gud...I normally do it with payitham paruppu...but this one is really tasty..Here in our Indian store we don't get Manathakkali keerai,so I tried this recipe with Thandang keerai...The taste is gud...Keep up the gud work..Chio

best regards,
anupandian

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)