மிளகு ரசம்

தேதி: September 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (17 votes)

 

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
தக்காளி - சிறியது ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். துவரம்பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
1 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு காப்பர் பாட்டம் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு புளி வாசனை போய் கொதித்து ஒரு கப்பாக குறைந்ததும், வெந்த துவரம் பருப்பை நீரில் கரைத்து 1 1/2 கப் அளவுக்கு சேர்க்கவும்.
மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், அதனுடனேயே கறிவேப்பிலையும் சேர்த்து ரசத்தில் கொட்டவும்.
சளி, ஜுரம் வந்த நேரங்களில் சூடாக இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி விடவும். மிளகுடன் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொடி செய்து போட்டால் வாசனையாக இருக்கும். ரசத்திற்கு நெய்யில் கடுகு தாளித்தால் தான் நல்ல வாசனையாக இருக்கும். ரசம் செய்ய எவர்சில்வர் பாத்திரத்தை விட காப்பர் பாட்டம் பாத்திரமே சிறந்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கொஞ்சம் வித்தியாசமான முறையில் ரசம் இருக்கு. அவசியம் பண்ணி பாக்கறேன். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆன்ட்டி அருமையான ரசம். வாழ்த்துக்கள். அருசுவைக்கு இன்னும் நிறைய டிஷ் தாங்க வித்தியாசமா. உங்கள் பணி தொடரட்டும். .

எனக்கு மிகவும் பிடித்த ரசம்.. அம்மா செஞ்ச அடுத்த நொடி ரசம் காலி :-) விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்.

KEEP SMILING ALWAYS :-)

பொதுவாவே ரசம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,ரசமும்,சாதமும் மீந்துவிட்டால் இரண்டையும் மிக்ஸ் பன்னி இரவே வைத்துவிட்டு மறுநாள் சாப்பிட்டால்...........அடாடாடா!!அதன் சுவையே தனிதான்!அதுவும் நீங்க புதுமாதிரி செய்து காண்பித்திருக்கீங்க!செஞ்சு பார்த்துடரேன்!!!குறிப்புக்கு நன்றி ராதா மேடம்!

Eat healthy

புதுமையான ரசம் பா வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள் ஆன்ட்டி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Hi,
Sorry to say but this is not called 'millagu rasam'. I totally 'disagree'. this is just a normal rasam but just done in a different manner. Infact 'millagu rasam' does not require dhal and tomato. Here it goes as told by my 86 yr old grandmother.

Grind green chillies, jeera, pepper, garlic,curry leaves after frying in small ounce of oil.
Heat oil, add mustard , red chilies, tamarind water, grinded paste, pinch of turmeric, salt, asafoetida and coriander leaves and boil it.
And yes, you then get the real taste of 'millagu rasam'.

I dont mean to be rude but just want to pass right infornmation on one of old traditional recipe.

Pls dont feel offended.

மிளகு ரசத்தில் பலவகை உண்டு....அதில் நான் எழுதியுள்ளது ஒரு வகை...என்னுடைய 40 வருட சமையல் அனுபவத்தில் செய்யும் மணமான ரசங்களில் இதுவும் ஒன்று....உங்களுடைய வேகமான பதிலைப் பார்த்தால் (இதற்காகவே உறுப்பினர் ஆன மாதிரி இருக்கு!!!) சின்னப்பொண்ணா இருக்கும்னு நினைக்கிறேன்...சரி....இந்த ரசமும் பண்ணிப் பாரும்மா..!!

It's nice to heard. i will try and get back to you

can u please tell me the quantity of jeera and pepper.

நீங்கல் செய்த ரசம் எங்க அம்மா செய்ர ரசம் மாதிரியெ இருக்கு.வழ்த்துக்கள் ராதா mam