urgent

ஏன் என் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை.என் குழைந்தைக்கு 2 நாட்களாக வயிற்றுப்போக்கு.வாந்தி.வீட்டு வைத்தியம் கூறுங்கள் தோழிகள்.pls urgrnt.

ஆப்பில் சூப் அல்லது வேகவைத்து கொடுக்கலாம்

நெஸ்டம் பிடிச்சி இருந்தால் அதையும் கொடுங்க.

Jaleelakamal

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது நேற்றிழிஉந்து வாந்தி வயிற்றுப் போக்கு இன்று 5 தடவை வாந்தி 2 தடவை வயிற்றுப் போக்கு மிகவும் சோர்வாக இருக்கிறான் இப்போது தான் பல் முலைக்கிது அதனால் இருக்குமா?அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?தாய் பால் கொடுக்கலாமா?அவசரம் உதவுங்கள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

கண்டிப்பா தாய்பால் கொடுக்கலாம். இந்த சமயத்தில் அதைவிட சிறந்த உணவு வேறெதுவும் இல்லை. மிகவும் நீரிழப்பு ஏற்பட்டுள்ளதால் ORS நீரில் கலந்து கொடுங்கள். அது கைவசம் இல்லையெனில் நன்றாக காய்ச்சி ஆறவைத்த நீரில் உப்பும் சர்க்கரையும் மிகச்சிறிய அளவில் சேர்த்து கொடுங்கள்.இதுதான் ORS.

இதெல்லாமே முதல் உதவிதான். இதுவே மருந்து அல்ல.. மிக அதிகமான வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் கைவைத்தியம் செய்வதைவிட டாக்டரிடம் காண்பிப்பதே உத்தமம்.

Don't Worry Be Happy.

என் மகளுக்கும் இப்படிட்தான்3 நாட்களுக்கு இருந்தது.தோழிகள் கூறியது போல் நெஸ்டம் மட்டும் வென்னீரில் கலந்து ஒரு நாளைக்கு 6 தடவை குடுத்தன்.ஆப்பிள்,கேரட் வேகவைட்து குடுங்கள்.இளனீர் ஒரு சங்கு குடுங்கள். 3 நாட்களில் நின்றுவிடும்.வாந்தி நிற்பதற்கு dr.onderm syrup கூடுட்தார்.pls dont give milk this time.give mothermilk.

மேலும் சில பதிவுகள்