காலிஃப்ளவர் குழம்பு

தேதி: September 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (21 votes)

 

காலிஃப்ளவர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - 2
கொத்தமல்லி தழை - கால் கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையின் காம்பை மட்டும் நறுக்கி விட்டு தண்டுடன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
இப்போது தக்காளி, கொத்தமல்லி விழுதை இதில் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும். குக்கரில் வைத்தால் 2 விசில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.
காலிஃப்ளவர் வெந்து குழம்பு சிறிது கெட்டியானதும், அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான காலிஃப்ளவர் குழம்பு தயார்.

வழக்கமாக காலிஃப்ளவரில் செய்யும் குருமா, பொரியல் வகைகளை விட இந்த குழம்பு வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி பச்சையாக அரைத்து சேர்ப்பதால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமா பண்ணி காட்டி இருக்கீங்க, கண்டிப்பா டேஸ்ட் சூப்பர் தான்.. இந்த வாரமே பண்ணிடறேன். கொஞ்சநாளா குறிப்பை காணோம்ன்னு இருந்தேன்....
கலக்கல் குறிப்போட வந்து இருக்கீங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

புதுவிதமான குறிப்பு ட்ரை பண்ணி பாக்கறேன் நன்றி நாங்க தக்காளி அரைக்காம செய்வோம் இப்டியும் செஞ்சி பாக்கறேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சம சூப்பர்... பார்த்ததும் சாப்பிட தோனுது. கண்டிப்பா ட்ரை பண்றேன். :) வித்தியாசமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அருமையா இருக்கு குழம்பு!

உடனே செய்துப்பார்க்கனும்போல தோனுது... தேவையான ஐட்டம்ஸ் எல்லாமும் வீட்டில ரெடியா இருக்கு! :) நாளைக்கே ட்ரை பண்ணிடறேன். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சுகி,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி.மகனுக்கு ஸ்கூல் திறந்தாச்சு.அதான் கொஞ்சம் பிஸி.காலிஃப்ளவர் குழம்பு கண்டிப்பா செய்து பாருங்க.

ரேணு,
தக்காளியும்,கொத்தமல்லியும் அரைத்து சேர்த்தால் சுவை வித்தியாசமா இருக்கும்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

வனிதா,
நலமா இருக்கீங்களா?காலிஃப்ளவர் குழம்பு செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ,
இந்த குழம்பு செய்வதும் ஈசிதான்.செய்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஹாய் வித்தியாசமான குறிப்பு. வாழ்த்துகள். எனக்கொரு கேள்வி. தனியா தூள்

என்றால் என்ன? அதனை எப்படி தயாரிப்பது? கேள்வி தப்பாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி

உங்க வாழ்த்துக்கு நன்றி.

தனியா தூள் என்பது மல்லி தூள் தான்.மல்லி விதைகளை திரித்தால் மல்லி தூள் கிடைக்கும்.

மிகவும் நன்றியுங்க

காலிஃப்ளவர் குழம்பு குறிப்பு ரொம்ப நல்லாயிருக்கு. கொத்தமல்லி வாசம் இங்க வரை எட்டுது;) கண்டிப்பா செய்வேன்...வாழ்த்துக்கள்!

Don't Worry Be Happy.

ஹர்ஷா காலிஃப்ளவர் குழம்புல கொத்தமல்லி தண்டு சேர்த்து செஞ்சு இருக்குறதுதான் ஸ்பெஷல். காலிஃப்ளவர் சாப்பிட்டும் ரொம்ப நாளாச்சு. உங்க குறிப்புக்காகவே வாங்கி செய்யனும்.

காலிஃப்ளவர் குழம்பு ரொம்ப நல்லாருக்குப்பா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜெய்,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கொத்தமல்லி வாசம் பிடித்தால் நிச்சயம் இந்த குழம்பும் பிடிக்கும்.கண்டிப்பா செய்து பாருங்க.காலிஃப்ளவருக்கு பதில்,மஷ்ரூம் அல்லது உருளைக்கிழங்கும் போட்டு செய்யலாம்.

வினோஜா,
காலிஃப்ளவர் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சா?அப்போ சீக்கிரம் காலிஃப்ளவர் வாங்கி,செய்து சாப்பிடுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

ஸ்வர்ணா,
செய்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

காலிஃப்ளவர் குழம்பு குறிப்பு ரொம்ப நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள் அன்பு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

neenga kudutha kuripuku thanx.................nethu senchu pathen nall vanthathu...........keep giving more receipies..........cauliflowerku pathila vera entha vegetable potu seialam..............pl suggest..............

பிரெஷ் மல்லி மனத்துடன் நல்லாயிருக்கு. பிரசன்டேஷன் அழகு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குமாரி,
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

ரம்யா ஷண்முகம்,
செய்து பார்த்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றி.
காலிஃப்ளவருக்கு பதில் மஷ்ரூம் அல்லது உருளைக்கிழங்கு
சேர்த்து செய்யலாம்.

http://arusuvai.com/tamil_help.html

இந்த லிங்க் பயன்படுத்தி,தமிழில் பதிவிட்டால் படிக்க சுலபமாக இருக்கும்.

லாவண்யா,
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.ஒரே மாதிரி ப்ரெசென்ட் பண்ணி போர் அடிக்குது, அதான். ;-)

ஹ‌ர்ஷா,
சொன்னபடியே வீக்கென்ட் உங்க‌ காலிஃப்ள‌வ‌ர் குழ‌ம்பு செய்து சாப்பிட்டாச்சு!. ந‌ல்லா கொத்த‌ம‌ல்லி ம‌ண‌த்தோட‌, கார‌சாரமா சாதத்துடன் சாப்பிட‌ சூப்ப‌ரா இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
காலிஃப்ளவர் குழம்பு செய்துட்டீங்களா?உடனே செய்து பார்த்துட்டு,வந்து பின்னூட்டம் கொடுத்து இன்னும் சந்தோஷப்படுத்திட்டீங்க. நன்றி.

வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

பதில் அளித்தற்கு நன்றி. தமிழில் பதிவு பண்ணிட்டேன்.........

romba nalla erundhudhu.super taste.

சமையல் நன்றாக இருந்தது

ஃபாத்திமா அம்மா,
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ரம்யாஷண்முகம்,
உடனே தமிழில் பதிவிட்டத்ற்கு ரொம்ப நன்றிங்க.

பெனசிர்,
காலிஃப்ளவர் குழம்பு,செய்துட்டீங்களா?மிக்க மகிழ்ச்சி.பதிவுக்கும் நன்றி.

Hi harsha,
I have tried your cauliflower curry today.. came out very well.. thank u for such a nice receipe...

Regards,
Raji

Enjoy the life

காலிப்ளவர் குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

ராஜி,
குழம்பு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

ஷங்கரி,
காலிஃப்ளவர் குழம்பு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

தங்களுடைய‌ காலிஃப்ளவர் குழம்பு செய்முறை வித்யாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!