புதினா பூரி

தேதி: June 28, 2006

பரிமாறும் அளவு: 15 பூரி

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
புதினா இலை - 1/2 கப்
ஜீரா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்


 

மிக்ஸியில் தண்ணீர் விடாமல், புதினா, எலுமிச்சைச் சாறு, ஜீரா, உப்பு, சர்க்கரை, மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
இந்த கலவையை மைதா மாவுடன் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும்.
சிறிய பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த புதினா பூரியின் படம்

<img src="files/pictures/aa339.jpg" alt="picture" />