பனானா சாக்லெட் ப்ரட்

தேதி: October 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (12 votes)

 

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3 (அல்லது) 4
ஆல் ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு - 1 1/2 க‌ப்
வெண்ணெய் - 1/3 க‌ப்
ச‌ர்க்க‌ரை - 3/4 க‌ப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ‍ ஒரு தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செமி ஸ்வீட் சாக்லெட் சிப்ஸ் - ‍ 1/2 க‌ப்


 

தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். (குறிப்பு: எப்போதுமே, பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது.)
முத‌லில் மைதா, பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை நான்கையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும். முட்டையை ஒரு சிறிய‌ க‌ப்பில் உடைத்து ஊற்றி அடித்து வைக்க‌வும். வெண்ணெயை உருக்கி வைத்துக் கொள்ள‌வும்.
வாழைப்ப‌ழ‌த்தை தோலை உரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு, முள்க‌ர‌ண்டி அல்ல‌து மேஷ‌ரால் ம‌சித்துக் கொள்ள‌வும். இத‌னுட‌ன் அடித்து வைத்திருக்கும் முட்டைக்க‌ல‌வை, உருக்கிய‌ வெண்ணெய், வெனிலா எசன்ஸ் போட்டு க‌லந்து கொள்ள‌வும்.
இப்போது, இந்த‌ வாழைப்பழ க‌ல‌வையை மாவு ச‌லித்து வைத்திருக்கும் பாத்திர‌த்தில் போட்டு ஸ்பேட்சுலா அல்லது ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் ரொம்ப‌ அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம், இல்லையென்றால் ப்ரட், மென்மைத்த‌ன்மை போய் க‌டின‌மாகிவிட‌ வாய்ப்பு உள்ள‌து.
அடுத்து, சாக்லெட் சிப்ஸை இத‌னுட‌ன் சேர்த்து, ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய 4 X 8 இன்ச் அளவுள்ள‌ பேனில் ஊற்றி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.
ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்த‌தும் ஒரு டூத்பிக்கை உள்ளே விட்டு, அது சுத்தமாக மாவு ஏதும் ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்த்து, ப்ரட் முழுவதுமா வெந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
பிறகு ப்ர‌ட்டை எடுத்து, க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌ விட‌வும்.
சுவையான எளிதாக செய்யக்கூடிய சாக்லேட் பனானா ப்ரெட் ரெடி. பரிமாறும் முன் ஸ்லைஸ் செய்துக் கொள்ளவும். சாக்லெட் கலந்து செய்து இருப்பதால், இது குழந்தைக‌ளுக்கு மிக‌வும் பிடிக்கும்! நமக்கும் அவ‌ர்க‌ளை ப‌ழ‌ம் சாப்பிட‌ வைத்த‌ திருப்தி கிடைக்கும்!

இங்கே நான் காண்பித்திருப்ப‌து, எலக்ட்ரிக் ப்ர‌ட் மேக்க‌ரில் பேக் செய்யும்முறை. இத‌ற்கு, மாவுக்க‌ல‌வையை அத‌ற்குண்டான‌ பாத்திர‌த்தில் ஊற்றி, பேக் ஒன்லி என்ற‌ ஆப்ஷ‌னை சூஸ் ப‌ண்ண‌வும். கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌த்தில், ப்ர‌ட் ரெடியான‌தும், ப்ர‌ட்டை எடுத்து, க‌ம்பி ட்ரேயில் வைத்து சூடு ஆற‌ விட‌வும். வெனிலா எசன்ஸ் இல்லையென்றால், வேறு ஃப்ளேவர், ரோஸ் எசன்ஸ் போன்றவை சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப அழகா தெளிவா செய்திருக்கீங்க. கடைசி படம் அருமை.. கண் கொள்ளா அழகு... :-) விருப்பபட்டியல்ல சேர்த்து ஸ்டார்ஸும் குடுத்துட்டேன்...

KEEP SMILING ALWAYS :-)

சம சூப்பரா இருக்கு... அதுவும் அந்த கடைசி பட பொம்மை சான்சே இல்ல. கியூட். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ,
சூப்பரான ரெசிப்பி.பனானா சாக்லெட் ப்ரெட் இதுவரை கடைகளில் தான் வாங்கி இருக்கேன்.அழகா செய்து காட்டிட்டீங்க.க்யூட்டான பொம்மையுடன் ப்ரசென்ட் பண்ணி இருப்பது கலக்கலா இருக்கு.பாராட்டுக்கள் சுஸ்ரீ.

அந்த எலக்ட்ரிக் ப்ரெட் மேக்கர் நல்லா இருக்கு.

ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க.விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.

சுஸ்ரீ, ரொம்ப அழகான எளிமையான குறிப்பு. பண்ணுவதற்கும் ரொம்ப ஈஸி போல, சீக்கரம் பண்ணி பாக்கறேன். மேலும் பல குறிப்புகள் அனுப்ப வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுஸ்ரீ சுபேரா செய்து காமிச்சி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்க பனானா சாக்லெட் ப்ரெட் சூப்பரா இருக்குங்க... மேல அந்த கோல்டன் கலர் நல்ல அட்ராக்ட்டிவா இருக்கு. ஓவனுக்குதான் க்ரீன் சிக்னல் கிடைக்கல ப்ரெய்ன் ட்யூமர் அது இதுன்னு பயமுறுத்தி வைச்சிட்டாங்க;( ப்ரெட் மேக்கர் வாங்கவாவது ட்ரை பண்றேன்;) வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

குறிப்பை வெளியிட்ட் அட்மின் குழுவினருக்கு முதலில் மிக்க நன்றி!
சரியான படங்களை தேர்வு செய்து, அழகா எடிட் செய்து வெளியிட்டு இருக்கிங்க! :) மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் ந‌ன்றி நாகா ராம்!
ஸ்டார்ஸ்ம் கொடுத்து, விருப்பட்டியலிலும் சேர்த்திட்டிங்களா?!! ரொம்ப‌ சந்தோஷம்! :) மீண்டும் நன்றி!

ஹாய் வ‌னி,
உங்க பாராட்டு கேட்டு ரொம்ப சந்தோஷம்! அந்த பொம்மை என் பொண்ணோட ஃபேவரைட் டால்! :) அவளும் இதைப்பார்த்து ரொம்ப ஹேப்பியாகிட்டா! :) மிக்க‌ ந‌ன்றி வ‌னி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க‌ வருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி ஹ‌ர்ஷா!
உங்க‌ பாராட்டுக்க‌ள் படித்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! :) இது செய்வது ஈசிதான், நீங்க‌ளும் முடியும்போது செய்து பாருங்க‌ள்! மீண்டும் ந‌ன்றி!

கிஃபா (உங்க பேர் சரிதானே தோழி?!),
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க‌ பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப‌ ந‌ன்றி சுகி!
ஆமாம், செய்வது ரொம்ப‌ ஈசிதான். க‌ட்டாய‌ம் உங்களுக்கு முடியும்போது செய்துபாருங்க‌, அப்ப‌டியே எப்ப‌டி இருந்த‌துன்னும் மறக்காம வந்து சொல்லுங்க! ;)

கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு நிறைய குறிப்புகள் அனுப்ப முயற்சிக்கிறேன் சுகி! :) தொடரும் உங்களுடைய உற்சாகமான பின்னூட்ட‌ங்க‌ளுக்கு மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க வருகைக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி குமாரி!

ஹாய் ஜெயா,
உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி ஜெயா!

(அவ‌னில் செய்த உணவுகளால் ப்ரெ‌யின் டீயூம‌ரா?! :( இதுவ‌ரை நான் கேள்விபட்டதில்லையே?!! நீங்க‌ சொல்வ‌து மைக்ரோவேவ் அவ‌னையா? அல்ல‌து ரெகுல‌ர் க‌ன்வென்ஷ‌ன் அவ‌னையா?!)
அப்ப உங்களுக்கு, ப்ர‌ட் மேக்க‌ர் ந‌ல்ல‌ சாய்ஸ்சா இருக்கும். இதில், கேக், ப்ர‌ட் எல்லாம் சூப்ப‌ரா செய்ய‌லாம். அருமையா வ‌ரும்! ட்ரை பண்ணிடுங்க!
மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அருமையான குறிப்பு, விரிவான விளக்கம், தெளிவான படங்கள், அழகான பிரசன்டேஷன். அமர்க்களமாக இருக்கு :) வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர் கேக் நல்ல செய்முறை விளக்கம் சீக்கிரமே ட்ரை பண்றேன் வாழ்த்துக்கள்
விருப்பபட்டியில் சேர்த்தாச்சு

சுஸ்ரீ,
அழகு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் லாவண்யா,
ஒன்னு விடாமா எல்லா விஷய‌த்தையும் பாராட்டிட்டீங்க‌! :) மிக்க நன்றி லாவண்யா உங்க வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்!
அப்புறம், எங்க ரொம்ப நாளாச்சு உங்ககூட பேசியே?! உங்க குறிப்புகளில் கொஞ்சம் பின்னூட்டம் எல்லாம் போட்டிருப்பேன்! பார்த்திங்களான்னு தெரியலை- ‍டைம் கிடைக்கும்போது பாருங்க‌! :)

ஃபாத்திமாமா,
உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! விருப்பப்பட்டியலில் சேர்த்திட்டிங்களா?! :) சந்தோஷம், முடியும்போது செய்து பாருங்க! மீன்டும் நன்றி!

ஹாய் கவி,
உங்க வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ