வாழைப்பழ கேக்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு: 4-6 serving

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மைதா - 2 கப்
பேக்கிங் பௌடர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வால்நட்ஸ் (அக்ரூட் கொட்டை) - 1/2 கப் (பாதியாக ஒடித்தது)
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் - 1/4 கப்
ப்லாக்ஸ் சீட் - 3 மேஜைக்கரண்டி
வாழைப்பழம் - 4 (மசித்தது)
8'' வட்டமான கேக் பான் - 2
பால் - 1/4 கப் (கலப்பதற்கு தேவைப்பட்டால்)


 

கேக் பானில் முதலில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி, மைதா மாவை பிசிறி வைக்கவும்
மைதா, பேக்கிங் பௌடர், உப்பு, சர்க்கரை,ப்லாக்ஸ் சீட், எண்ணெயை ஒன்றாக சேர்த்து அடித்து பிசையவும்.
பிறகு வால்நட் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்றாக குழைத்து கேக் பானில் கொட்டி வைக்கவும்.
நெய் தடவி மாவு தூவிய வட்டத்தட்டில் போட்டு 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

how to upload the dish picture to this recipe??

படத்தை அட்மினுக்கு அனுப்பி வைங்க. கூடவே இந்த ரெசிபி லிங்கையும் அனுப்புங்க.

‍- இமா க்றிஸ்