Motion பச்சை நிறத்தில் போகிறாள்

என் 7 மாத பெண் குழந்தை தாய் பால் மட்டும் உண்டால். இப்போது15 நாட்கள் மில்க் பவுடர் (nan pro) கொடுகேறோம் .இந்து முதல்( first food rice) கொடுத்தோம் . மலம் பச்சை நிறத்தில் போகிறாள் (ஒரு நாளுக்கு இரண்டு முறை) இது இயல்புதான ?

குழந்தை பச்சை நிறத்தில் மலம் செல்ல காரணம் ஒன்று வயிற்றுக்கு போதாத உணவு
அல்லது பச்சரிசி சாதம் தாய் சாப்பிட்டிருந்தாலும் அல்லது நீங்கள் கொடுத்த சாதம் பச்சரிசியாக இருந்தாலும் வயிற்றில் பிரளியை கிளப்பிவிடும் பச்சையாக போகும் பச்சரிசியாக இருந்தால் கொடுக்க கூடாது புது அரிசியாக இருந்தாலும் சரியாக வேகவைக்காத புழுங்கல் அரிசியாக இருந்தாலும் அதாவது சிங்கிள் பாய்லர் அரிசி அதாவது அரைவேக்காட்டு அரிசி
அரிசியில் உள்ள பூச்சிமருந்தின் வேகம் இவை எல்லாமே பச்சையாக போக காரணம்அப்போ வயிற்றுவலி வந்து அழுதால் பயப்படலாம் இல்லை என்றால் பயப்பட தேவை இல்லை
சில குழந்தைக்கு உடம்பெல்லாம் பச்சை பச்சையாக திட்டுத்திட்டாக இருக்கும் அந்தக்குழந்தையும் சமயத்தில் பச்சையாக மலம் செல்லும் 6 மாதம் வரை செல்லும் பயமில்லை பச்சைமச்சம் போல பெரிதாக உள்ளங்கையளவுக்கெல்லாம் கூட இருக்கும் அது இவ்வாறு மலம் கழிவதால் வெளியேறும் உடம்பின் நிறமும் நாளடைவில் மாறும் பீ மச்சம்னு கூட சொல்வாங்க

சில குழந்தைகள் புதிய உணவை உட்கொள்ளும்போது இப்படி தான் நிறம் மாறி போகும். அது ஒன்றும் இல்லை நார்மல் தான் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பெரிதாகி அதன் செரிமானம் அதிகரித்ததும் எல்லாம் சரியாகி விடும் (அதுவரையிலும் இப்படி தான் போகும் என்றும் இல்லை).
குழந்தையின் மலம் வெள்ளை கலர், அடர்ந்த கருப்பு கலர் அல்லது மலத்தில் இரத்தம் வெளியேறினால் தான் உடனடியாக குழந்தை மருத்துவரை அணுக வேண்டும். அதனால் கவலை இல்லாமல் இருங்க. ஹாப்பி பேரண்டிங்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Thank you so much

Thank you so much

5 month baby green color with noraiya poop pora, cold irugu,

மேலும் சில பதிவுகள்