கொண்டைக்கடலை மசாலா

தேதி: October 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு சிறிய கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வறுத்து அரைக்க:
வரமிளகாய் - 3
வரமல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
தேங்காய் நறுக்கியது - சிறிய கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
கொண்டைக்கடலையை முந்தின இரவே ஊற வைத்து குக்கரில் ஆறு, ஏழு விசில் விட்டு வேக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டிய பொருட்களைப் போட்டு வறுத்து தேங்காய் மட்டும் கடைசியில் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, சிறுது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஓரளவு வதக்கவும்.
கரண்டியால் வெங்காயம் தக்காளியை மசித்து விடவும்.
அதன் பின்னர் கொண்டைக்கடலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான கொண்டைக்கடலை மசாலா தயார். சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது. இந்த கொண்டைக்கடலை மசாலா.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கொஞ்சம் வித்தியாசமா இருக்கு ஜெய்

வறுத்து அரைப்பது புதுசா இருக்கு, நம்ம ஊரு மனம் வருதே, வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குறிப்பு நல்லா இருக்கு; ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

என்ன இது. இப்போ தான் கொண்டைக்கடலை. ஊற வச்சேன். என்ன செய்யலாம்னு இங்க வந்து பார்த்தா எனக்காகவே கொடுத்த மாதிரி புது ரெசிபி. தாங்க்ஸ்பா. இன்னைக்கு நைட் செஞ்சிட்டு நாளைக்கு சொல்றேன்.எப்படி இருந்ததுனு. குறிப்பு கொடுத்ததுக்கு நன்றி.& வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அட்மின் அண்ணா & கோ ;) அருமையாக படத்தை தேர்ந்தெடுத்து போட்டிருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

நம்ம ஊரு மணம் வருதா;) டேஸ்ட்டும் அதே மாதிரிதான் இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருடா ...ரொம்ப தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி இமா...கண்டிப்பா ட்ரை பண்ணனும்;)

Don't Worry Be Happy.

உங்களுக்காகவே கொடுத்த ரெசிப்பிதான் இது அதிலென்ன சந்தேகம்;) கட்டாயம் செஞ்சு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்;-) மிக்க நன்றி;-)

ஆனா அதுக்காக அக்கான்னு சொல்லி இப்படி கவுத்தீட்டீங்களே;))

Don't Worry Be Happy.

ஜெய்,
கொண்டைக்கடலை மசாலா,புதுமையா இருக்கு.வித்தியாசமான செய்முறையில் அழகா செய்து இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்,ஜெய்.

சூப்பரா இருந்துச்சுபா. 3 சப்பாத்தி உள்ள போச்சு. மிளகாய் அதிகமா வச்சு காரமா போச்சு. ஆனா டேஸ்ட் சூப்பர்பா. அவங்களும் இன்னைக்கு வித்தியாசமா இருக்கு. டேஸ்டும் நல்லா இருக்குனு சொன்னாங்க.தாங்க்ஸ் & வாழ்த்துக்கள்பா.

நல்ல குறிப்பு சீக்கிரம் செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பு..கண்டிப்பா செய்வீங்கன்னு தெரியும்;) நன்றி.

Don't Worry Be Happy.

பாராட்டுக்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க...செய்து பார்த்ததோட நில்லாமல் உடனடியா பின்னூட்டமும் கொடுத்து என்னை மேலும் மகிழ்ச்சியில் திளைக்க வச்சிட்டீங்க.மிக்க நன்றி;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி அவசியம் செய்து பாருங்க கட்டாயம் உங்கலுக்கு பிடிக்கும்;-)

Don't Worry Be Happy.

...

Don't Worry Be Happy.

மூன்று பதிவுகாளாயிடுச்சு;(

Don't Worry Be Happy.

ரொம்ப நல்ல வாசமான குறிப்பு ;) கலக்கலா இருக்கு... செய்துடுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லதொரு குறிப்பு ஜெயா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கொண்டைக்கடலை மசாலா,புதுமையா இருக்கு.வறுத்து அரைத்து செய்திருப்பது நல்லா இருக்கும் கண்டிப்பா ட்ரை பன்னனும் வாழ்த்துக்கள் ஜெய்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜெயலக்ஷ்மி ,
சுவையான,புதுமையான கொண்டைக்கடலை மசாலா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தேங்க்யூ தேங்க்யூ ....கண்டிப்பா செய்வீங்கன்னு தெரியும் இல்லைனா விடமாட்டோம்ல;-)

Don't Worry Be Happy.

உங்கள இங்க வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு ..சூ அப்பா முடியலை;-) தேங்க்ஸ்மா;)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி;) கண்டிப்பா செஞ்சிடுங்க இல்லைனா கல்ப்ஸோட காங்கோ ஜூஸ் இப்ப என்கிட்டதான் இருக்கு;)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கவிதா;)

Don't Worry Be Happy.