"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 2"

தோழிகளே,
தோழிகளே முதல் இழை 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990"
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tamil/node/26265 "

ரேணுதேவ்,
வணக்கம் நலமா? வலி என்றால் எந்தமாதிரின்னு சொல்லலையே, அடிவயிரு கணத்து பீரியட்ஸ் முன் இருக்குமே அதுபோலவா?இல்லை தொப்புளில் துவங்கி வஜினா வரை வலியா?எப்படி இருந்தாலும் காலை கொஞ்சம் உயர வைத்து தூங்குங்கள்,அதிக பளு வேலைகள் செய்யவேண்டாம்,இருவரும் இணைய வேண்டாம், நாள் தள்ளியதால் சொல்கிறேன்..துனி அலச அடிக்கடி குனிவோமில்லையா அதுபோன்ற வேலைகள் செய்யவேண்டாம்.கொஞ்சம் விளக்கெண்ணையை தொப்புளில் தடவலாம்,கால் பெருவிரல் நகத்தில் வைக்கலாம் சூடு குறாஇய. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுப்பா....

ஹாய் தாங்ஸ் ஆமாபா பீரியட்ஸ் முன்ன வர்ற வலி மாறியே தான் வஜினாக்குள்ள திடீர்னு வலி வருது போய்டுது நா டெய்லி துணி துவைகறதோ அலசறதோ இல்ல வாரம் ஒருமுறை மெஷின்வாஷ் அப்றம் உக்கார்ந்துட்டே அலசிடுவேன் மத்தபடி வேலையெல்லாம் குறைச்சி இருக்கேன் அப்றம் கத்திரிக்காய் சூடா சாப்பிடகூடாதா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுதேவ்,
காய்களில் கட்டுப்பாடு இல்லை ரேணு, அனைத்தையும் அளவுடன் உண்ணுங்கள்,முருங்கை கீரை,பேரிச்சை,இப்போது வேண்டாம்.தயிர் ,மோர் குடிக்கலாம்,வெள்ளரி,இளநீர்(வெரும்வயிற்றில் கூடாது)அவ்வப்போது குடிக்கலாம்.காரட் ஜூஸ் குடிக்கலாம்......சாத்துக்குடி.....சரியா..

வயிறு சில நேரங்களில் எரிச்சலா இருக்கு பா என்ன செய்யலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு,மீனு
ரேணு அதற்குதான் தயி,மோர் குடிக்க சொன்னேன்,வெள்ளரி கிடைத்தால் அதை மோரில் கட்பண்ணி,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,கொஞ்சமா இஞ்சி போட்டு குடிக்கலாம் டேஸ்ட்டாவும் இருக்கும் உடலுக்கும் குளிர்ச்சிதரும். சீரக தண்ணீர் வைத்து குடிக்கலாம்.உடல் குளிர்ச்சி தரும்.
மீனு உன்னை மறக்க முடியுமா.?இப்பதா ரேணுகிட்ட கேட்கலாம்னு இருந்தேன்,நீயே வந்துட்ட நல்லா இருக்கம்ப்பா,நீ எப்படி இருக்க? மாமி ஊருக்கு போயாச்சா சரிசரி இனி ஜாலிதான்,பீரியா ட்ரைப்பண்னுங்க...

ரேணுராஜ், பட்டர்ஃப்ரூட் சூடா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு
பட்டர் புரூட் சூடுன்னு இதுவரை நான் கேள்விப்பட்டதில்லைப்பா, அப்படி இருந்திருந்தா அதற்கு பட்டர்ன்னு பேர் வந்திருக்குமா? ஆனால் எதுவானாலும் அளவோடு சாப்பிடுங்க,சரியா?

ஹாய் ரேணு நான் வீட்ல எல்லாரும் நலம். பாப்பாக்கு வெயிட் பண்றவுங்க புளி அதிகம் சாப்ட கூடாதா? ஏன்னா எங்க வீட்ல எல்லா குழம்புக்கும் புளி சேர்ப்போம். (சிக்கன், முட்டை, மட்டன் தவிர) அதான் கேட்டேன். ஓகே ரேணு ஏன்னா நான் அந்த ஜூஸ் தான் குடிச்சேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு
புளி சேர்க்க கூடாதுன்னு ஒன்னுமில்லை மீனு அது குளிர்ச்சிதான். ஆனால் புளிக்கு இரத்தத்தை சுண்ட வைக்கும் பண்பு உள்ளதாகக் கூறுவர். அதிகமில்லாமல் அளவோடு சேர்த்துக்கங்க....
சிக்கன் பிராய்லர்ன்னா அதை அதிகம் எடுத்துக்க வேண்டாம்,உடம்பிற்கு சூடுப்பா.

அன்பு தொழி.. எனக்கு திருமணம் முடிந்து 1 1/2 வருடம் ஆகிரது எனக்கு குழந்தை எல்லை நீர் கட்டி இருக்குனு மருதுவர் சொன்னங்க உங்கள் தளதில் சொன்ன படி மலை வெம்பு இந்த மதம் 8 ம் தேதி முதல் 3 நாள் குடிதேன். இதறக்கு முன்பு 2 அல்லது 3 மதம் தல்லி வரும் இந்த மதம் மருபடியும் 18 நாளில் மதவிடாய் வந்து விட்டது. இது எதாவது ப்ரொப்லெமா இருக்குமா எனக்கு குழந்தை பிறக்குமா please reply friends.

மேலும் சில பதிவுகள்