காய்கறி-ராஜ்மா சூப்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (சதுரங்கள்)
முட்டை கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
பார்லி - 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடி உப்பு - 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு - 1/4 டீஸ்பூன்


 

ஒரு கப் தக்காளி, 1/2 கப் வெங்காயம், உருளைக்கிழங்கை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேகவைக்கவும்.
வேகவைத்தபின் அதை நன்றாக ஆறவைத்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
நறுக்கிய முட்டை கோஸை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மீதமுள்ள தக்காளி, ராஜ்மா, பார்லி சேர்த்து 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு-மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

நித்யா!
ராஜ்மா என்றால் என்ன? அதை வீட்டில் செய்யமுடியுமா? எப்படி? கடையில் கிடைக்குமா?பதில், ப்ளீஸ்!

ராஜ்மா என்பது மொச்சை வகை சார்ந்த ஒரு பயறு. கடைகளில் ராஜ்மா என்ற பெயரிலேயே கிடைக்கின்றது. Red kidney beans என்ற ஆங்கிலப் பெயரிலும் கிடைக்கும். Kidney beans என்று வெளிநாடுகளில் கிடைப்பது நாம் ராஜ்மா என்று சொல்வதில் இருந்து வித்தியாசப்படுகின்றது. ராஜ்மாவில் இரண்டு மூன்று வெரைட்டிஸ் உள்ளது. தாங்கள் அடையாளம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றில் இரண்டு வகை ராஜ்மாக்களின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

சற்று கருப்பு நிறமாக உள்ளது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

<table><tr><td>
<img src="files/rajma1.jpg" alt="Rajama variety 1" />
</td>
<td>
<img src="files/rajma2.jpg" alt="Rajama variety 2" />
</td></tr></table>

ரொம்ப thanks sir! இதை நாங்கள் சிகப்பு மொச்சைக் கொட்டை என்போம். காய்கறியோடு சேர்த்து சமைப்பொம். அதுதானே ராஜ்மா? ok!