முட்டைகோஸ்-பனீர் ரோல்ஸ்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 10
முட்டை கோஸ் - 1.5 கப் துருவியது
உதிர்த்த பனீர் - 3/4 கப்
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்


 

ப்ரெட்டின் ஓரத்தின் வெட்டவும்.
கடலைமாவை சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
முட்டை கோஸ், உப்பு, கொத்தமல்லி, பனீர், பச்சை மிளகாயை ஒன்றாக கலக்கவும்.
இந்த கலவையை 10 உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ப்ரெட்டின் ஒரு மூலையில் இந்த உருண்டைகளை வைத்து, ப்ரெட்டை உருட்டவும்.
ப்ரெட்டின் ஒரத்தை கடலைமாவுக் கலவையால் ஒட்டவும்.
எண்ணெயில் இந்த ப்ரெட்டை பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நித்யா!
பனீர் என்றால் என்ன? அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? அதை வீட்டில் செய்துக் கொள்ளமுடியுமா? முடியும் என்றால் எப்படி? கடையில் வாங்குவதாக இருந்தால் எப்படி கேட்கவேண்டும்? விளக்கம், ப்ளீஸ்!

பனீர் என்பது இந்தியாவில், அதுவும் வட மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பால் பொருள். ஆங்கிலத்தில் அதற்கு மாற்று பெயர் இருப்பதாக தெரியவில்லை. Paneer என்றே ஆங்கிலத்திலும் குறிப்பிடுவர். Farmer cheese, cottage cheese என்றெல்லாம் வெளிநாடுகளில் கிடைக்கக் கூடியவை பனீர் போன்ற பொருள்தான் என்றாலும், நாம் தயாரிக்கும் பனீருக்கும், அவற்றுக்கும் வித்தியாசம் உள்ளது.

Amul நிறுவனம் நிறைய சுவைகளில் (புதினா, அன்னாசி, ஆரஞ்சு.. ) பனீர் தயாரித்து விற்பனை செய்கின்றது. சூப்பர் மார்க்கெட்டுகளில் பால், சீஸ், வெண்ணெய் போன்ற பொருட்கள் வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் பார்த்தீர்கள் என்றால் பனீரும் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

பனீர் செய்முறை அறுசுவையில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேடுதல் பக்கத்தில் பனீர் என்று கொடுத்து தேடிப் பாருங்கள். உங்களின் வசதிக்காக வீடுகளில் பனீர் தயாரிக்கும் செய்முறையைக் கீழே கொடுத்துள்ளேன். பனீர் படமும் உள்ளது.

பாலை அடுப்பில் வைத்து பொங்கும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பால் திரிந்து வரும். அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி அதை ஒரு தட்டின் மீது துணியோடு வைத்து அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தினால் சமமாக வரும். இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது 2 மணிநேரம் பிரிட்ஜில் இருக்க வேண்டும். பின்னர் அதை வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.

<img src="files/paneer.jpg" alt="paneer" />

புரியும்படி போட்டோவுடன் சொன்ன பளிச் பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி sir!