கேபேஜ் டயட் சூப்

தேதி: October 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

கோஸ் - பாதியளவு
காலிஃப்ளவர் - கால் பாகம்
ப்ரோகொலி - கால் பாகம்
கேரட் - ஒன்று
தக்காளி - ஒன்று
காளான் - 5
குடை மிளகாய் - பாதி
செலரி - ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் - 4
மல்லித் தழை - சிறிது
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.எல்லா காய்களையும் வேண்டிய அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி 2 நிமிடம் கழித்து, ஸ்ப்ரிங் ஆனியனையும், குடைமிளகாயையும் போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து காளான் மற்றும் கோஸை சேர்த்து வதக்கவும்.
பின்னர் ப்ரோகொலி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டி விடவும்.
மேலும் செலரி மற்றும் கேரட்டை சேர்த்து 15 கப் தண்ணீர் ஊற்றி ஸிம்மில் 45 நிமிடம் வரை நன்கு மூடி வைக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்து, அதில் உள்ள சத்து நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து மல்லித் தழை தூவவும்.
சூடான, ஹெல்தியான சூப் ரெடி.

டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத் தூளும் கம்மியாக போடவும். மாலை நேரத்திற்கோ இரவு உணவிற்கு முன்போ சாப்பிட எனில் சுவைக்கு ஏற்ப உப்பு போடலாம். சிறிது சாதமோ, சிறிது நூடுல்ஸோ சேர்க்கலாம். டயட்டுக்கு இல்லை எனில் நம் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளையோ, தண்ணீரின் அளவையோ மாற்றிக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ஒரு ஹெல்தி வெஜ் சூப். வாழ்த்துக்கள் முதலில். எல்லா காய்கறிகளும் இருக்கு. நான் செஞ்சிட்டு சொல்றேன்கா எப்படி இருந்ததுனு. மறுபடியும் நல்ல குறிப்பு கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.

சூப் பார்க்கவே அட்டகாசமா இருக்கு :) நல்ல கலர் காம்பினேஷனோட காய்கள் எல்லாம் சேர்த்து ரொம்ப ஆரோக்கியமான குறிப்பு. அவசியம் ட்ரை பண்ண வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்ஸ் அழகான ஆரோக்கியமான சூப் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ்,
அருமையான, ஆரோக்கியமான சூப் செய்து காட்டியிருக்கிங்க!
படங்கள் எல்லாம் பளிச்னு இருக்கு! :) க‌ண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

super

ரம்ஸ்,
நிறைய காய்கள் போட்டு,கலர்ஃபுல்லா,பார்க்கவே நல்லா இருக்கு.அழகா ப்ரெசன்ட் பண்ணி இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

கடைசி போட்டோ நல்லாயிருக்கு. நல்லதொரு டயட் குறிப்பு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்யா,
கலர் காம்பினஷன் அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆரோக்கியமான குறிப்பு சூப் காய் கறிnna எனக்கு ரெம்ப புடிக்கும் கண்டிப்பா செய்வேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இப்படியொரு அழகான சூப் செஞ்சு கொடுத்தா யார் வேண்டானு சொல்லுவாங்க....சூப்பரா இருக்குங்க;)

Don't Worry Be Happy.

ரம்யா சூப் சூப்பரா இருக்கு .வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கும், பாராட்டிய அனைவருக்கும் நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)