க்ரில்ட் பேபி பொட்டேடோ

தேதி: October 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (14 votes)

 

பேபி பொட்டேடோ - கால் கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

பொட்டேடோவை கழுவி முள் கரண்டியால் சுற்றிலும் குத்தி சிறிது உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து தோல் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க கூடாது)
பேக்கிங் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி பொட்டேடோவை மிளகாய் தூள் பேஸ்டில் ஒவ்வொன்றாக முக்கி ட்ரேயில் வைக்கவும்.
உருளைக்கிழங்குடன் ட்ரேயை அவனில் கிரில் மோடில் 5 நிமிடம் வைக்கவும்.
ட்ரேயை அவனில் இருந்து எடுத்து பொட்டேடோவை மறுபுறம் திருப்பி திரும்ப அவனில் கிரில் மோடில் 5 நிமிடம் வைக்கவும். சுவையான கிரில் பொட்டேடோ ரெடி.

கார விரும்பிகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். காரம் விரும்பாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காரம் கம்மியா போட்டு கொடுக்கலாம். அவரவர் அவனுக்கு தகுந்தது போல் நேரத்தை கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த குறிப்பு நல்லா இருக்கு. நல்ல காரமான வறுவல்.

பெரிய கிழங்கிலும் செய்யலாமா? பார்க்கவே ரொம்ப அழகா இருக்குது. நைட் சமையலுக்கு இது தான் செய்யப்போறேன். thanks to fathima.

god is love

சூப்பரா இருக்கே.

‍- இமா க்றிஸ்

அழகாக இருக்கு. செய்து பார்க்கிறேன். நன்றி.

நல்ல சுலபமான குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுலபமான சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ம்ம்ம் என்ன சொல்றது எங்க வீட்டில் எல்லாரும் உருளைக்கு ரசிகர்கள் அதுவும் காரத்தோட நாளைக்கு இதுதான் எனக்கு மதியத்துக்கே சமைக்க போறேன் ரெம்ப நன்றி
ஸ்டாரும் குடுத்தாச்சு விருப்ப பட்டியலும் சேர்த்தாச்சு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

சுவையான சூப்பரனா குறிப்பு!
பார்க்க ரொம்ப அழகா இருக்கு! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

காரசாரமான க்ரிஸ்பியான குறிப்பு கண்டிப்பா செய்தே ஆகனும் :-)

KEEP SMILING ALWAYS :-)

ஃபாத்திமா அம்மா,
உருளை கிழங்கில் விரைவில் செய்யக்கூடிய டிஷ்.செய்முறை நல்லா இருக்கு.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

பாத்திமா அம்மா,

எளிமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வருகைக்கு மிக்க நன்றிடா

பெரிய கிழங்கிலும் செய்யலாம் கிழங்கை நீளமாக நறுக்கி செய்யனும் வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

வருகைக்கு நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

உருளை என்னொட பேவரிட் சுப்பர்ப் டிஷ் எப்படிப்பா ஸ்டார் குடுக்கனும் விருப்ப பட்டியல்ல சேத்துட்டேன்ப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

சூப்பரனா குறிப்பு ,வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கலர் ஆள மயக்கிடும்போல இருக்கே, வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

மதியம் தான் செஞ்சேன்மா. கொஞ்சம் கிழங்கு வச்சு தான் செஞ்சேன். எல்லாம் அப்பவே காலியாயிருச்சு. சூப்பர்மா. சம டேஸ்டா இருந்தது. வாழ்த்துக்கள்,தாங்க்ஸ்மா நல்ல காரமான குறிப்பு கொடுத்ததுக்கு. ரொம்ப டேஸ்டாவும் செய்ய ஈசியாவும் இருந்துச்சு.

supera irunthathu fathima thanks...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪