பேக்டு காலிஃப்ளவர் ஃப்ரை

தேதி: October 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று (பெரியது)
க‌ட‌லைமாவு - 4 தேக்க‌ர‌ண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - ‍ ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - 3/4 தேக்கரண்டி
சீர‌க‌த்தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணெய் - 5/6 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌


 

முதலில் காலிஃப்ளவரை நறுக்கி கொஞ்சம் பெரிய அளவு பூக்களாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கின பூக்களை சுடுநீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும்.
இதனை மைக்ரோவேவ் சேஃப் பாத்திரம் ஒன்றில் போட்டு, ஒரு மூடி போட்டு, 5 நிமிடம் மைக்ரோவேவில் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில், மேலே சொன்ன எல்லா மாவு, பொடி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்கவும்.
இப்போது மைக்ரோவேவில் இருக்கும் வெந்த காலிஃப்ளவரை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, கலந்து வைத்திருக்கும் மசாலா பொடியை சிறிது சிறிதாக தூவி கரண்டியால் கலந்து விடவும். காய் வெந்து வரும் போது காயில் சேர்ந்திருக்கும் ஈரமே போதுமானதாக இருக்கும், வேறு தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
எல்லா பொடியையும் தூவி முடித்ததும், 2, ‍ 3 தேக்கரண்டி எண்ணெயையும் விட்டு, எல்லா காய்களிலும் படுமாறு பிரட்டிக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு பேக்கிங் ட்ரேயில், அலுமினியஃபாயில் போட்டு (அல்லது) நாண்ஸ்டிக் (எண்ணெய்) ஸ்ப்ரே செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். இப்போது மசாலா தடவி தயார் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை இந்த ட்ரேயில் ஒன்றோடு ஒன்று படாமல் பரவலாக போடவும்.
இதனை 400 F முற்சூடு செய்த‌ அவனில் வைத்து, 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பிற‌கு அவ‌னை திறந்து, காய்க‌ளை எல்லாம் கொஞ்ச‌ம் திருப்பிவிட்டு, மேலும் இர‌ண்டு தேக்கரண்டி எண்ணெய் எல்லா காய்களுக்கும் படுமாறு விடவும்.
மேலும் ஒரு 15 நிமிடங்கள் பேக் செய்து, முடிக்கும் போது, ஒரு சில நிமிடங்கள் ப்ராய்ல் செட்டிங்கில் வைத்து, பிறகு எடுத்து பரிமாறவும். ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் தயார்!

காலிஃப்ளவர் அளவை பொறுத்து மிளகாய் தூள், உப்பு அளவை, அவரவர் விருப்பத்திற்கு தக்கவாறு கூட்டி குறைத்து போடலாம். அதேப்போல அவரவர் வீட்டு அவனை பொறுத்து, பேக்கிங் நேர அளவுகளும் வித்தியாசப்படும். முதலில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வெந்திருப்பதை சரிப்பார்த்துக் கொண்டு மேலும் 5 அல்லது 10 நிமிடங்கள் கூட்டி வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Very nice .this is a good evening tiffun for all

கண்டிப்பா எல்லார்க்கும் நல்ல ஸ்நாக்ஸ் பா இது செய்து பாக்கறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்பு பிடித்திருக்கிறது சுஸ்ரீ. விரைவில் முயற்சித்துப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

காலிஃப்ளவர் ஃப்ரை ரொம்ப நல்லாருக்கு...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

ஒரு பேக்டு ஐடமா இருக்கு முகப்பில்... ;) வரிசையா குறிப்பா கொடுத்து அசத்தறீங்க... கலக்குங்க. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா முயற்சி செய்து பார்த்து சொல்றேன். அருமையா இருக்க் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை சுஸ்ரீ,

செய்து பார்க்கிறேன்... இந்த பேக்கிங் பண்றது தான் எனக்கு அப்பப்போ இடிக்கும். ஒன்னு சரியா வராது இல்ல ரொம்ப ஆகிடும். இதை கண்டிப்பாக கடைசியில பிராய்யில் பண்ணனுமா!!! எனக்கு சரியா தெரியல கொஞ்சம் சொல்லுங்க. ட்ரை பண்றேன்.

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு முதலில் என் நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

முதல் ஆளா வந்து தந்த உங்க பாராட்டிற்கு நன்றி கௌதமி! :)

உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ரேணுதேவா!
கண்டிப்பா செய்து பாருங்க, மறக்காம எப்படி வந்ததுன்னும் வந்து சொல்லுங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

உங்களுக்கு குறிப்பு பிடித்திருந்ததில் மிக்க சந்தோஷம் இமா! :)
கண்டிப்பா முயற்சித்து பாருங்க, எப்படி இருந்ததுனும் வந்து சொல்லுங்க! : ) ந‌ன்றி!

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஸ்வர்ணா! :)

வருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி ஃபாத்திம்மாம்மா! :)

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
உங்க‌ளோட‌ தொட‌ரும் பாராட்டுக‌ளுக்கும், உற்சாகமான வரிகளுக்கும் மிக்க‌ ந‌ன்றி! :) இப்போதைக்கு கொஞ்ச‌ம் சந்தர்ப்பம் அமைந்தது, அதான்... நினைத்திருந்த‌‌ சில‌ குறிப்புக‌ளை எல்லாம் வரிசையா அனுப்பிட்டு இருக்கேன்! :)
உங்க‌ளுக்கு முடியும்போது க‌ட்டாய‌ம் ட்ரை ப‌ண்ணிட்டு வந்து சொல்லுங்க, எப்படி இருந்ததுன்னு! :) மீண்டும் ந‌ன்றி!

*********

உமா,
நாளாச்சு பேசி! எப்ப‌டி இருக்கிங்க? ரோஹித், சின்ன‌வர் எல்லாம் எப்ப‌டி இருக்காங்க‌?! :)

உங்க‌ளுக்கு அவ‌ன் எதாவ‌து ப்ராப்ள‌ம் கொடுத்தா, பேக்கிங் கொஞ்ச‌ம் சிக்க‌ல்தான்! என‌க்கு, முன்னாடி அபார்ட்மெண்ட்டில் இருந்த‌‌ப்ப‌ அப்ப‌டிதான்! எதையாவ‌து பேக் செய்ய‌னும்னா ரொம்ப‌வே பொறுமையா செய்ய‌னும், ஒவ்வொரு 10-15 நிமிஷத்துக்கும் செட் பண்ணி, செக் ப‌ண்ணி... இப்படி! :( சோ, அதன்படி பார்த்துக்கோங்க!

அப்புற‌ம் கடைசியா ப்ராய்ல் ப‌ண்ணுவ‌து, லைட்டா க்ரிஸ்ப்பின‌ஸ் கொடுப்ப‌தற்க்காக‌... உங்க‌ அவ‌னில் முடியாதென்றால், ப‌ர‌வாயில்லை, இந்த ஸ்டெப் ஸ்கிப் பண்ணிக்கலாம்! பேக்கிங் டைமிலேயே, காலிப்ள‌வ‌ர் ந‌ல்லா சாஃப்டா வெந்துவிடும். ட்ரை பண்ணி பாருங்க உமா. எப்படி வந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க! :) ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
பேக்டு காலிஃப்ளவர் ஃப்ரை பார்க்கவே சாப்பிட ஆசை வருது.அழகா செய்து இருக்கீங்க.செய்முறையும்,விளக்கமும் வழக்கம் போல் தெளிவா கொடுத்து இருக்கீங்க.விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்,சுஸ்ரீ.

சுஸ்ரீ சூப்பரா இருக்கு .வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குறைவான எண்ணெயில் டெஸ்ட்டி குறிப்பு தந்து இருக்கீங்க சுஸ்ரீ, வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹர்ஷா,
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! :)
விருப்பப்பட்டியலில் சேர்த்திட்டிங்களா?! சந்தோஷம்!. கட்டாயம் முடியும்போது செய்து பாருங்க. எப்படி இருந்ததுன்னும் வந்து சொல்லுங்க! :) ந‌ன்றி!

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி குமாரி! :)

பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப ந‌ன்றி சுகி! ஆமாம் சுகி, குறைந்த எண்ணெயில் செய்து நல்லா வெஜிடபிள் சாப்பிட முடிவதுதான் இதில் விஷேசம்! :)

அன்புடன்
சுஸ்ரீ